தரு, மரம், தாவரம்
புசிக்க கனிதந்து
பசிக்கு உணவாகும்
வாசிக்க தாளாகும்
படுக்க பாயாகும்
படைப்பவனுக்கு கோலாகும்
பாதைக்கு நிழலாகும்
பார்வைக்கு குளிராகும்
உடுக்க உடையாகும்
உடைக்க விறகாகும்
ஊருக்கு அழகாகும்
உயிருக்கு நல் காற்றாகும்
மலைக்கு சேயாகும் - வான்
மழைக்கு தாயாகும்
மழலைக்கு தொட்டிலாகும்
மனைக்கு கட்டிலாகும்
வையகம் செழித்து
வாழ்வாங்கு வாழ- நட்டு
வைத்தே வளர்த்திடுவோம்
வனச்சாமி மரங்களை
இயற்கை தந்த வரம்
இவ்வுகின் உயிர்காவல்ராம்
இதனில் இல்லா வளங்கள்
இல்லை அது தன்னையே தரும் தரு, மரம், தாவரம்
1 comment:
Wonderful lines and meanings. Great job! Go ahead Sir .
Post a Comment