Sunday, November 16, 2025

வாடாதே

 வறுமை வந்தால் வாடாதே 

வெறுமை என்று ஓடாதே 

பொருமை கொண்டு போராடு

 பெருமை வந்து உனைச் சேரும்


 இரு கை விரல்கள் பத்து 

இறைவன் அளித்த சொத்து 

முயற்சி ஒரு பொன்வித்து 

பயிற்சி எடு விளையும் நல்முத்து

 

 தேடினால் கிடைத்திடும் வழி 

வாடினால்  தடை படும்  ஒளி 

ஓடினால் திறந்திடும் வெளி- விழி

ஓய்தலை இன்றோடு ஒழி


 உழைக்கத் துணிந்தால் 

உலகம் உன் துணை வருமே 

உனது வியர்வைத் துளியினிலே 

உயர்வு விருட்சம் உயிர் பெருமே


 வென்றவன் எல்லோரும் தோற்றவன் தான் 

தோல்வி என்பது வெற்றியின் தொடர் நிலை தான்

தோற்றுப் பார் துலங்கும்

தோல்வியும் ஒரு வெற்றி என விளங்கும்


 வெற்றி என்பது எல்லோருக்கும் பொது 

வெளியில் இல்லை அது உன் உள்ளத்தின் கரு 

வெள்ளத் துணிந்தால் மெல்ல திறக்கும் 

வேதனை மறைந்து புது உலகம் பிறக்கும்


 பயணத்தின் பாதை சரியாக 

பார்வையின் வீச்சு நேராக 

பழகிட வேண்டும் சீராக 

பண்புகள் வளரும் சிறப்பாக 


நாளும் பொழுதும் கற்றிடு 

நல்லவை யாவும் பெற்றிடு 

ஆளுமை பண்பை வளர்த்திடு

அமைதி வழிதனில் வாழ்திடு


வரும் சோதனைகள் நம்  தரம் பார்க்கும் 

வந்த வேதனைகள் நமக்கு தடம் காட்டும் 

வாழ்வில் சாதிக்கப் பிறந்தோமே நின்று

வற்றாத சாதனை என்றும் நமதென்று


No comments: