ஈதலே இறை 03/12/2025
இருக்கும் பொருள் எல்லாம்
இல்லாருக்கு ஒன்று ஈவதற்கே- ஈதலே
இன்பம் பெருக்கும் -செல்வம்
சேர்த்தே செய்வது என்பது
துன்பம் பயக்கும் -துணிக
துயிக்காத பொருளால் ஏதும் கிட்டாது
துளி கூட அருளும் ஒட்டாது
துளியள வாயினும் ஈக இல்லாருக்கு
பழியில்லா பொருள் நிதம் தேடி
பலரோடு பகுத்துண்ணாமல்
படுகுழியில் புதைத்து பூதமாய்
பக்கதுதிருந்து பாதுகாத்து விட்டு
பாழ் குழியில் படுக்கப் போகையிலே
பரம் பொருளின் அழியாத
பேரருள் வேண்டல் விழிப்
பார்வையிலான் காணும் விடியல் போலே
மீட்டாத யாழும்
தீட்டாத வாளும்
கேளாத பண்ணும்
வீழாத வான் மழையும்
விழுந்து முளையா வித்தும்
எழுந்து முளைத்தும் விளையா பயிறும்
பழுத்தும் பறவை கொத்தா கனியும்
இருபதில்
பயன் என்ன விளையும்
மெய்ப் பொருள் கண்டால்
கைப் பொருள் தேவையில்லை
வைப் பொருள் எங்கும் உடன்
வருவதில்லை
மை இருள் வழியினிலே
கை விளக்காதல் ஈதல் ஒன்றே
உயிர் உய்திட உறு துணை
பொய்யிலா அறமே அதைவிட
பொருத்தமானது ஏதுமில்லை
பசிப்பவர்க்கு உணவு கொடு
புசிப்பவர்க்கு உணவாகு நீ
வசித்திடலாம் அவர் எண்ணங்களில்
வாழ்ந்திடலாம் அவர் உள்ளங்களில்
எளியவர் வாழ்வு ஏற்றம் பெற
எழைகள் யாவரும் வலிமை பெற
அறமே செய்ய விரும்பு அனைத்திற்கும்
அருமருந்தாகும் அஃதே
படு துன்பப் படு
படுவதனால் பயன்படு பிறருக்கு
படு பயப் படு
படுவதனால் தெளிவுபடு
படு பாடு படு
பாடுபட்டதால் சிகரம் தொடு
படு பயணப் படு
படுவதனால் பாதை கெடு பிறருக்கு
சடுகுடு ஆட்டம் வாழ்க்கை
சடுதியில் முடிந்து விடும் ஓட்டம்
இடு காடு கூட இடம் தராது
இடுப்பரைஞான் கூட கூட வராது
இருப்பதைக் கொடுப்போம்
இழப்பு ஏதுமில்லை
இன்புற்று இருப்போம்
இன்னல் துளியுமில்லை
விடு ஆசையை விடு
விடு விடை காண வாழ்க்கையிது
விடுமுறை கால வாசதலம் இது
விடு இடையினல் வந்து
விடு இடைவிட்டு வெட்டி விடு
விடு விட்டு விடை கொடு
விடு விடு என
விடுதலை கிடைத்து விடும்
கொடு முடியும் மட்டும் கொடு
கொடுமை இல்லா மனம் கொண்டு
கொடு கொடுக்க முடியாதனவெல்லாம்
கொடு தடுக்க தடை ஏதுமில்லை
கொடு அளவில்லா கொடை கொடு
கொடு அன்பினால் அனைத்து கொடு
கொடு உன்னையே பிறருக்கு கொடு
கொடு முடியில் உன்னை தாங்கும் உலகு
தடு தீயவை யாதாயினும் தடு
தடுமாறாமல் தடம் மாறாமல்
தடுப்பதனால் விடுதலை கிடைக்கும்
தடு தடையாய் இருக்கத் தயாராகி
தடு தவறுகள் யாதாயினும் தடு
தடு தன்னலமில்லாது தட்டிகேட்டு
தடு தடையும் ஒரு தவமே
தடுப்புகளே தவறுகளைத் தடுக்கும்
கூடவே இருப்பதெல்லாம்
கூடவே வருவதில்லை
கூட்டை உடைத்து
கூட்டிச் செல்லும் கொடுங் கூற்று
கூட்டணி சேர்ப்பதில்லை
கூடுவிட்டு ஆவி போகும் முன்னே
கூடு மட்டும் கொடுத்திடுவோம் கொள்வார்க்கு
கூடு மட்டும் விட்டு செல்வோம்
அன்போடு
நீயே பறை அதை அறை
நீயே நீள் வரை அதை மறை
நீயே திரை அதை விலக்கு
நீயே கரை
உடைத்து நிறை
நீயே சிறை அதை தகரத்து விரை
நீயே மறை அதை
உணர்வில் உறை
நீயே இறை
அதை உன்னுள் நிறை
நீயே நிறைவு - தேடு தாள் திறக்கும்
ஒளி சேர் இறையில் ஒன்றிட ஓர்
வழி சொல்வேன் கேள் தட்டாது
வெளி எங்கும் நிறை ஒளி காண
வழிகள் பல போகும் - ஈதலின்
ஒளியால் உள் இருளகற்று
ஒழியும் எல்லாம்- விழிகளின்
களிப்புடனே கட உள் அன்பின்
மெழியாய் கடவுள் காண்பாய்
ஆக்கம் ; Date
: 04/12/2025 யாழ்நிலா.
பாஸ்கரன் TNPL School ஓலப்பாளையம் கரூர்- 639136
Cell : 9789739679
No comments:
Post a Comment