Tuesday, September 18, 2018

காப்பீடு



கட்டாயமா வேணுமையா காப்பீடு
இக்காலதிலே எல்லோருக்கும் நம்ம எல்லோருக்கும்
தட்டாமத்தான் நா சொல்லுவத கேளுங்க
            தப்பு தவறு ஏதுமிருந்தா கொஞ்ச கூறுங்க

கட்டிடமா? கால்நடையா?  காரு வண்டி, கனரக வாகனமா?
            துணிகடையா,   நகைகடையா?  வேளாண்மையா?
திட்டமிட்ட திருட்டு கொள்ளை, வெள்ளம் பஞ்சம், தீ விபத்து என எல்லாத்திற்கும்
விதவிதமான காப்பீட்டு திட்டங்கள் பல விரிவாயிருக்குது இங்க
 கட்டுபடியாகும் காப்பீட்டு திட்டம் ஒன்ன எடுத்து கையில்வையி அது
            காலமுழுதும் காப்பாத்தி கரைசேர்க்கும் உன்ன

கொஞ்சமான காசிலே நிறஞ்ச பலன் கொடுக்கும் காப்பீடு
நெஞ்சம் நிமிர்ந்து வாழ நாமும் செய்வோம் காப்பீடு
வாடிநிற்கும் போதிலே வந்துதவும் காப்பீடு
வளமான வாழ்வினுக்கு வழிகாட்டும் காப்பீடு

துன்பம் வரும் வேளையிலே துணையாய் வரும் காப்பீடு
இன்பமதை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கும் காப்பீடு
இன்னல் வந்தா ஓடிவந்து உதவிடும் காப்பீடு
எண்ணிலா பலன்தரும் எற்றமிகு காப்பீடு

வீட்டு காப்பீடு, விபத்துக் காப்பீடு,
ஆளுக்கு காப்பீடு, ஆலைக்கு காப்பீடு,
வாழ்நாள் காப்பீடு, வைத்திய காப்பீடு
வாகனக் காப்பீடு,  வசதிக்கு காப்பீடுன்னு

படித்தவர்கும் பாமரர்க்கும் பல வகை காப்பீடு
பாதுகாப்பாய் நாம் வாழ
பரத பிரதமரின் பயனுள்ள காப்பீடு
பங்களிப்போம் பயன்பெறுவோம்

No comments: