சின்ன சின்ன பூக்கள் இங்கே
சின்ன சின்ன பூக்கள் இங்கே
வண்ண வண்ண ஆடைசூடி
வானவில்லாய் மலர்ந்திருக்க
வையமெங்கும் அன்புமழை பொழிகிறது
மின்னல் மின்னும் விழிகளிலே
மின்சார மொழிப் புன்னகையில்
மின்மினிகள் சிரிக்கையிலே
எண்ணிலா எண்ணங்கள் ஒளிர்கிறது
கண்ணாண கண்மணிகள்
கற்கண்டு பொன்மணிகள்
வெண்ணிலவு ஒளி முகத்தில்
வேடிக்கை குறும்புகள் வழிகிறது
கொண்டாடும் இடத்தினிலே
குழந்தைகள் தினத்தினிலே
கொஞ்சும் மழலை மொழிதனிலே
நெஞ்சம் மகிழ்ந்து தெளிகிறது
துள்ளிவரும் மானாக
பள்ளிவரும் பிள்ளைகட்க்கு
சொல்லித்தரும் அறிவுடனே - அகமகிழ
அன்பும் அள்ளித் தருவார் ஆசிரியர்
அன்புக் குழந்தைகளே
அறிவு பாலருந்த
அன்னையர் கரம் பிடித்து
ஆசையாய் தினம் பள்ளிக்கு வருவோம்
காலத்தால் அழியாத கல்விதனை
காலத்திலே கருத்தாய் கற்று
கனிவுடனே கற்பிப்போம் ஞாலமெங்கும்
கலங்கரை விளக்காகவே ஒளிவீசுவோம் நாளெல்லாம்
|
Date : 14/11/2025
யாழ்நிலா. பாஸ்கரன்
ஓலப்பாளையம்
கரூர்- 639136
Cell : 9789739679
No comments:
Post a Comment