வீசப்படும் வலை
பேசப்படும்
விலை
தேசப்பற்றிற்குச்
சிலை
வேசம்போடும்
நிலை
மனசாட்சிகள்
களையப்பட்டு
மன்னராட்சியாய்
அரசர்கள் மட்டும்
மணிமகுடம்
சூடும் மகுடிவித்தை
மக்களாட்சிக்கு
இந்த மண்ணே சாட்சி
கூட்டுக்
கொள்ளையின்
கூட்டாஞ்சோற்று
கூட்டாளிகள்
கூடாரம்
அமைத்து கொள்ளையடிக்க
கூப்பாடு
போடுகிறார் கொள்கை கோட்பாடென
குள்ள
நரி கூட்டங்கள்
நல்லதொரு
வேடங்கள்
வெல்லக்கட்டி
பேச்சுக்கள்
கள்ளத் தனமே
மூலதனம்
கத்தை
கத்தையாய் காசு கட்டுகள்
வித்தை
விதைத்து அவன் அறுக்க
சொத்தைக்
காசுக்கு விலைபோகும்
ஒத்தை
விரல் இழந்த ஏகலைவர்
குட்டியானை
வண்டியிலேறி
வெட்டிபயல்களின்
பின்போவோம்
பட்டியாடு
போலேயவன் நமையடைத்து
கட்டுகதைப்
படம் காட்டி மொட்டையடித்திடுவர்
பட்டைசோறுக்கும்
புட்டி
மதுவுக்கும்
பாதையோர
ஞமழிகள் போல
போதையேறி
சுற்றி வருவோம்
அணிமாறும்
ஆட்சிமாறும்
இனி
இல்லை கூட்டு என கூவிடுவார்
ஈனப்பிறப்பாய்
மக்கள் கூட்டம்
உழைத்து
பிழைக்க மறந்து ஓடும் மந்தையாடுகள்
ஊழலுக்கும்
கையூட்டுக்கும்
ஐயமின்றி
அளிப்பார் வாக்கு
எழுத்து
எல்லாம் என்று ஏமாறுவர்
ஏய்பவனை
சாய்க்காமல்
வாக்கு
வங்கிகளாய் வாக்காளர்கள்
வாக்குறுதி
வைப்புத் தொகைகளில்
வக்கற்ற
மக்கள் விலைபேசி விற்க-
வாக்கு
விற்பனை திருவிழாவாய் தேர்தல்
குடவோலை செய்து
முடியாட்சியிலேயே
குடியாட்சி
செய்த
மூத்தோர்
வழிதோன்றல்களா நாம்?
பட்றிவும்
இல்லை
பாட்டன்
இட்டறிவுமில்லை
பட்டினி
வயிற்றுக்காக
பட்டியில்
மிதிபட்டுச் சாகிறோம்
விடுதலைக்காக
விட்டு
விடுதலையான
உயிர்களின் வலி
விடுமுறைக்கால
கணக்கின்
விடுதல்கள்
நமக்கு தெரியாது
வீட்டுக்கு
வீடு
ஓட்டுக்கு
காசு
நாட்டுக்கு
கேடு
நல்லதை
தேடு வெல்க நாடு
ஆக்கம் ;
Date : 03/12/2025
யாழ்நிலா. பாஸ்கரன்
TNPL School
No comments:
Post a Comment