கண்ணழகு கண்ணம்மா
எல்லையில்லாப் பேரின்பம் கொண்டு வந்தாய்
எ(ஏ)ழு பிறப்பின் முழுப்பயனும் எனக்கு அள்ளித்தந்தாய்
ஏளனமாய் எள்ளி நகைத்தவர்கள் மூக்குடைய என் மகளானாய்
கள்ளமில்லா வெள்ளைச் சிரிப்பழகில்
உள்ளம் கொள்ளை போனதம்மா
இல்லம் எங்கும் உன் வரவால் - இன்ப
வெள்ளம் பொங்கி வழியுதம்மா
கண்ணழகு கண்ணம்மா என் கரம் தவழும் சின்னம்மா
கண்ணில் வந்த கவின் மின்னல் நீயம்மா- என்
கண்ணே பட்டுவிடும் என்று எண்ணியே –உன்
கன்னமதில் கருமைப் பொட்டிட்டாலோ உன்னம்மா?
சின்னஞ் சிறிய உன் பொன்பட்டு பாதம் பட்டு
என்னை நான் மறந்தேனே- நீதானே என் செல்ல சிட்டு
புன்னகைக்கும் புது முல்லை மொட்டு
உனனைப் பெற என்ன தவம் நான் செய்தேனோ
குறும்புகள்
பல செய்யும் குழந்தை நீ
அரும்பு
விட்ட மலர் மொட்டு - தித்திக்கும்
கரும்பான
உன் மழலை மொழி கேட்க
விரும்பி
மகிழ்ந்து தவிக்கிது என் செவி தட்டு
கைவீசியாடும்
அழகுப் பொம்மை நீ என்
கவலைகளை
தூர வீசி எறியச் செய்துவிட்டாய்
பொய் பேசியே
வாழும் பொல்லாத உலகில்
மெய்யான
இன்பம் நீ தான் எனக்கு காட்டிய கண்ணே நீ வாழ்க!
1 comment:
சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள். குழந்தை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அழகு. உங்கள் பதிவு எங்கள் தளத்தில்...
"நொய்யல் நதிக் கரை | கவிதை | கண்ணழகு கண்ணம்மா : சிகரம்
தொடருங்கள். தொடர்வோம்.
Post a Comment