Saturday, August 18, 2018

மலையாள மழை வெள்ள பேரிடர் நிதி

வெள்ள நிவாரண நிதி உதவிக்கு
https://donation.cmdrf.kerala.gov.in/

கடவுளின் தேசம் கதறியழுகிறது
கடல் போல் வெள்ளம் கவலைதருகிறது
கடமை நமதே காப்பாற்ற புறப்படுவோம்
கடன்பட்டாயினும் கடுகளவேனும் உதவிடுவோம்

மலையாள மக்கள் கண்ணீர் துடைக்க
மழை வெள்ள பேரிடர் நிதிக்கு
மழை மேகம் போலே மனமுவந்து
மலைபோலே நிதிகுவிப்போம்

ஓய்விலாப் பெரும் பேய்மழையில்
ஓய்விடமிழந்து தவிக்குது கேரளம்
ஓய்விலா உன் ஈகைகுணம் இன்று
ஓய்வெடுக்கலாகுமா என்தமிழ்சாதியே

நனைந்து நடுங்கும் களரிதேசத்தறகு
நாமிணைந்தே ஓடி உதவிடுவோம்
நம்மிடம் உள்ளதை தந்து
நாம் நட்பினால் உயர்ந்திடுவேம்

உடைதந்து உணவளிப்போம்
குடைதந்து உயிர்காப்போம்
படைதந்து பேரிடர் மீட்போம்
மடைதிறந்து மனிதம் காப்போம்





No comments: