Friday, August 17, 2018

இளைய மகாத்மா

அமைதியின் ஓயாத இதயத்துடிப்பு
ஆளுமையின் வீழாத புதிய வீரம்
இளமை சிந்தனையின் முதிர்ந்த  மொழி
ஈடுஇணையில்ல உழைப்பின் உயிர் மூலம்

உயர்ந்த இடத்து எளிமை முகவரி
ஊருக்கு உழைத்த ஓயா ஒளிவிளக்கு
எதிரிக்கும் இரங்கிய இமயத்து குளிர் பனி
ஏழைக்கு எல்லாம் தந்த ஞானஓளி
ஐயன் புத்தனை பொக்ரானில் புன்னகைக்க சொன்னவர்
ஒளிரும் பாரத்தின் மென் கவிதை
ஓங்கிய பன்பின் உயர் தலைவன்
ஔவியம் பேசா அடலேரு
இஃதெலம் அட்டல் ஐயனே உன் சிறப்பு

கவிதையின் கவிதை நீ
கார்கிலின் கதாநாயகன்
தங்கநாற்கர சாலையின் தாய்
நல்லாட்சியின் நன்பண்
லாகூருக்கும் பேருந்து தேரேட்டிய நட்புறவு  சாரதி
காலம் உன்னை அழைத்து சென்றதின்று
கடவுளின்  திருவடி நிழலில் இளைப்பார
கண்ணீருடன் வழியனுப்புகிறோம்
இளைய மகாத்மா நின் புகழ் நீடு வாழ்க!


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு சிறப்பான அஞ்சலி...