Saturday, August 22, 2015

தமிழே இனி



சங்கத் தமிழாய் நீ இருந்து

சாகாத இலக்கியங்கள் பல பெற்றெடுத்தாய்
சாய்ந்தழிந்து வீழ்ந்த மொழிகளிடை
சாகா வரம் பெற்றே நீ வளர்ந்தாய்


எத்தனையோ எதிர்ப்புகளையும்
எண்ணிலடங்கா இன்னல்களையும் எற்று வீழாது
எதிர்த்து நின்று ஏறு நடை போட்டு
எட்டி உதைத்து வென்றாய் காலமெனும் காலன்தனை
                                                         
இயக்கத் தமிழாய் நீ இருந்து
இயக்கங்கள் பலவற்றை வாழவைத்தாய் நீ
இருந்தும் இயலவில்லை அவைகளினால் உன்னை
இதயத் தமிழாய் இத்தமிழ் நிலத்தில் வாழவைக்க 

இன்னிலையில் இப்புவியினை இணைக்க
இணையமெனும் இணையில்ல வலைபினைல் வந்ததுவே
இருண்டுகிடந்த தமிழ்தாயின் விழியினுக்கு
இ(மி)ன்ஒளி ஊட்டிட இணைந்தோமே உலகத் தமிழரெல்லாம்

எங்கிருந்தும் எழுதி வலை எற்றிவைத்திடலாம்
எம் கருத்தை, கவியை, கட்டுரையை, காட்சிகளை இதனில்
எவரும் கண்டிடுவார்,  கருத்திடுவார், மறுத்திடுவார்
எதிர்த்திடுவார் .ஏற்றிடுவார் , போற்றிடுவார்

எற்றம் பல ஏற்று என்றும் மங்காத மாண்புடை எம் தமிழ்தாயே
எங்கெங்கும் கங்கு கரை காணமல் நீ பொங்கி வளர்ந்து வாழ
எந்நாளும் நல்வளத்தை நாம் கொணர்ந்து குவிப்போம் உன் மடியில்
எம் இதயத்தமிழே வளரிளமை வனப்புடனே இனியும் நீ இருப்பாய் 
இணையத்தில் தரவுகள் முலம் உறவுகளை இணைக்கும்  தாயாய்

1 comment: