Tuesday, August 25, 2015

தேசம் நம் பாரத தேசம்



அன்பு நேசம், அகிம்சை பேசும்
அகிலம் போற்றும் அன்னை தேசம்
அறிவிற் சிறந்த அறிஞர் தேசம்
ஆற்றல் நிறைந்த இளைஞர் தேசம்
                                                பாரத தேசம் !


இயற்கை வாழும் இனிய தேசம்
ஈகை செறிந்த புனித தேசம்
உழவர் உழைப்பில் உயர் தேசம்
ஊக்கம் மிகுந்த மறவர் தேசம்
                                               பாரத தேசம் !

வடதிசை இமயத்தின் குளிர் பனியும்
தென்திசை குமரியின் கடல் அலையும்
கீழ்திசை வங்கத்தின் கதிரொளியும்
மேற்திசை அரபித் தென்றல் தாலாட்டும் தேசம்
                                                பாரத தேசம் !

மானுட புனிதர் மகாத்மாவை ஈன்ற தேசம்
மக்களாட்சியின் மணம் பரப்பி வளரும் தேசம்
மாண்புடை தியாக சீலர் பலர் சிந்திய      
செங்குருதிப் புனலில் உயிர்த்த தேசம்
                                                பாரத தேசம் !
எழுச்சி எங்கும் பொங்கும் எழில் தேசம்
ஏற்றம் பல கண்ட எங்கள் தேசம்
வேற்றுமை பல உண்டிங்கு ஆயினும்
ஒற்றுமையாய் ஒன்றுபட்டு வாழும் தேசம்

No comments: