Saturday, October 18, 2008

பகை வெல்ல படை சேர்வோம்

அன்னை பூமி அருகில் இருக்க

ஆங்கோர் அவலம் நடக்குது காணீர்!

இன்னல் சூழ்ந்த இலங்கைத் தீவில்

ஈழம் பற்றி எரிகிறது பாரீர்!

உதிரச் சகதியில் நம் உறவுகள் செத்து மிதக்கையில்

ஊமையாய் நாம் இருந்திடல் ஆகுமோ?

எதிரியின் படுகொலைக்கு எண்ணிக்கை ஏதுமில்லை

ஏனென்று எதித்து கேட்பவர் எவருமில்லை

ஐய்யகோ! நாம் அருகிருந்தும் பயனில்லையே

ஒற்றுமை கொண்டு எழுந்திடுவோம் – நாமெலாம்

ஓர் இனம் என்றே உணர்ந்திடுவோம்

ஔதடம் கொண்டு ஓடிடுவோம்

அஃதை தடுப்பார் எவர் பார்த்திடுவோம்


கடலினைத் தாண்டி நம் கரங்கள் நீளட்டும்

காப்பது ஒன்றே நம் கடமையாகட்டும்

கிணற்றுத் தவளைகள் சில இங்கே கூச்சலிடும்

கீழ்மை மனத்தார் பலர் கேளி செய்வார் தயங்காதீர்.

குருதி சிந்திச் சாவும் தமிழர் உயிர் குடிக்கும்

கூற்றுவன் தான் சிங்களன் வெறியன்

கெடுமதியுடைய இன வெறியன் அவனிடம்

கேட்டால் கிடைக்குமா விடுதலை ?

கைகட்டி யாசித்தால் வருமா விடுதலை ?

கொடுமைகள் கோடி செய்தே கொன்றழித்தான் தமிழரை

கோழைகளாய் நாம் இருந்தது போதும்

கௌதமபுத்தன் பெயரில் இனக்கொலை செய்யும்

அஃறிணை மாக்களை அடக்கிட புறப்படுவோம்



சக்தி கொண்டு எழுவோம்

சாதல் ஒரு முறைதான்

சிலைகளாக நினைக்கும் தலைகளாக வேண்டாம்- நாம்

சீரிய செயலில் இறங்கும் தமிழர்களாவோம்

சுழல் வரும் கடலினிலே

சூழ்ந்தருக்கும் சூல் கொண்ட போர் மேகம்

செல்லும் வழி எங்கும் எதிரியின்

சேணைகள் பலவுடனே பெரும்

சைனியங்கள் சேர்ந்து வரும்

சொல்லொண்ண துயர் வரும்

சோர்வு கொள்ளல் ஆகாது

சௌகரியம் தேடாமல்

எஃகு போல் எதிர்த்து நின்று பகை வெல்வோம்

2 comments:

சிவா சின்னப்பொடி said...

பாராட்டுக்கள் நண்பரே
http://sivasinnapodi1955.blogspot.com

Anonymous said...

சிங்களவர்களின் ஆணவமும், இனவெறியும் தவிடுபொடியாக, தமிழினமே எழுந்திரு, போரிடு, வெற்றி வாகை சூடு