காற்று வெளியிலே
நாற்று வயலிலே
கவிதை மொழியிலே நாளும் வாழும்
உன் நினைவிலே நான்
நேற்று வரையிலும்
வேற்று நினைவிலே
இன்று வந்ததும்
உந்தன் கனவிலே நான்
நதியை போலவே
புதிய அழகிலே- நீ
அதன் நடையைப் போலவே
இன்ப வெள்ளத்தில் நான்
பளிங்கு மாளிகை
எழுந்து வந்தது போல் - நீ
படிக்கட்டுகளாய் - உன்
பாதம் பட தவமிருக்கிறேன் நான்
பவள மல்லி பூவின்
பனி தவழும் புன்னகை - நீ
புதயல் கண்ட ஏழையின்
இதயமாய் நான்
காலையில் கதிராய்
மாலையில் மதியாய் - நீ
இரண்டிலும்
இருப்பு கொள்ளாது நான்
வைகறையில் வரும்
வசந்தமாய் - நீ
வாசமலர் சுற்றி வரும்
வண்டினமாய் நான்
பார்க்கும் பார்வையிலும்
பயணிக்கும் பாதையிலும் பசுமையாய் - நீ
பசுமையின் நிழல்தனில்
பச்சிளம் குளவியாய் நான்
மலை முகடுகள் தோறும்
முத்தமிடும் முகில்களாய் - நீ
முத்த சத்ததிடை கடல்
முத்து குளித்தவனாய் நான்
பித்து பிடித்து சொக்கிப் போனேன்
புதிது புதிதாய் பூக்கும்
இயற்கையே உன்
இணையில்ல பேரழகில்
No comments:
Post a Comment