Thursday, August 23, 2007

பாவம் நாங்கள்

ஆயிரம் மதங்கள்
அவனி தனில்
அவதரித்தன
ஆயினும் என்ன?
அணுவளவு கூட
அன்பு தழைக்கவில்லை வையம் தனில்

நபி என்றும் ஏசுவென்றும்
அரியென்றும் சிவமென்றும்
அவதார புருமூரெல்லாம்
அரிதாரம் பூசிவந்தார்
ஆயினும் என்ன?-அணுக்கால் அளவு கூட
அன்பு பூக்கவில்லை பாரினிலே

மதவாதம்
இனவாதம்
சாதீயவாதம்
பயங்கரவாதம் என பல
பக்கவாதங்களில் பாதிக்கப்பட்டு
பட்ட மரமாய் வெட்டுண்டு விழ்ந்தது
பாருலக பரந்துபட்ட சமுதாயம்

கல்லிலும் கடலிலும்
புல்லிலும் புதரிலும்
உள்ளிலும் வெளியிலும்
தூணிலும் துரும்பிலும்
துணை சுற்றும் கோள்யாவினிலும்
ஊறைந்துள்ளான் இறைவனென்றார்

உண்மையாயின் உதைபட்டு வதைபட்டு
உதிரம் சொட்ட சொட்ட
உயிர் விட்டு சாகும் ஊமை மக்கள்
உடல்களில் இல்லையே இறைவன்? காண்
தூண் பிளந்த நரசிம்மம்
துயர் துடைக்க வான் பிளந்து வரவில்லை என்? கேள்

கடவுள் பெயர் சொல்லி
கலகம் பல செய்வித்தே
உப்பு வியர்வை சிந்தி
உழைத்து களைக்காது

உண்டு களித்தே
செண்டு தெளித்தே
செப்புத்திருமேனி
கொப்புக் குழையாது
கப்பு கப்பாய் கையில் தங்க
காப்புகள் பூண்டு

தோப்பும் துரவும்
தொகை தொகையாய்
மானியமும் பெற்று
மனிதரிடை பேதம் வளர்த்து
மாநிலத்தில் மதவாதமூட்டும்
உன்மத்தர் உடல் தோல்
உரிக்க வந்த மின் காந்த சாட்டைக்காரன்

கடவுள் உண்டு என்று சொல்ல நான்
காவியுடை கண் கட்டுகாரனல்ல
கடவுள் இல்லை என்று சொல்லும்
கருஞ்சட்டை பொயாரின் பேரன்

தன்னுடல் பொருளாவி தனம் யாவும் தந்தே
மண்ணுடல் பரவிய மாந்தர் தம் மூளையில்
மண்டிக்கிடந்த இருளறுத்து மாண்பிலா ஒளி தந்தார்
மா மேதை தந்தை பெரியார்

அவர் தம்
மாண்புமிகு மாணவரும்
மக்கள் உள்ளத்தில் உறைந்திருந்த
மடி ஆச்சார மூட பழக்கங்களை
மடை உடைத்த புது நதியின்
மலை புறட்டும் பொங்கு புனலாய் புகுந்து
மன மாசுகள் துடைத்தெறிந்தார்

கயமை கொண்ட கடவுளர்க்கு
கதவடைப்பு செய்ததனால்
தூய்மை பட்ட மனதுள்ளே
வாய்மை வந்தமர்ந்ததடா

நோய்மையாவும் செத்தழிந்து
துன்பம் ஒழிந்ததடா
தாய்மை கொண்ட நெஞ்சில்
தனியாத மனிதநேயம் தழைத்ததடா

வெண்மை தாடி வேந்தன் மறைந்த பின்னே
அறியாமை இருள் மீண்டும்
அணிவகுத்தே அவணிதனை
அடிமை கொள்ள பகை முழக்கம் செய்யுதடா

பழமை எறித்த பகுத்தறவு பகலவனை
பகைமை கொண்ட பருத்த
கருமுகில்கள் காவி போர்த்தி மறைக்குதடா
பெருமையோடு பக்குவப்பட்ட மனதில் பழந்தூசு படியுதடா

பெரியாரின் பேரன்களுக்கு
அறியாசன ஆசை மட்டுமே
பெரிதாய் போனதாலே
பதவி வெறி அரசியலின்
அத்தாட்சியாய் சாதியும் மதமும்

காட்சி பொருளாக்கி கட்சி
கொள்கைதனை கற்றில் துக்ற்றிவிட்டு
கடவுள் கொள்கை மட்டும்
கதிமோட்மூம் என துணை கொண்டார்
திடவுள்ளம் கொண்ட திராவிடர்களெல்லாம்
கடவுளுக்குள் கலந்திட்டார்

தேவைகள் யாவும் வாக்கு
தேவதைகளானதனால்
கோயில் தோரும்
கோ தானம் செய்ய மஞ்சளுடை சூடி
வயில் தனில் வாசையில்
தெரு கல்லாய் காத்துக் கிடகின்றார்

மசூதிகள் சென்று மறையோதி
கஞ்சி குடித்திட்டார்
தேவாலயத்தில் நின்று தேவனிடம்
பாவிகள் நாங்களென்றும் உன்
பார்வை பட வேண்டுமென்றும்
பயபக்தியோடு வேண்டிக் கொண்டார்

காரணங்கள் பலவாக்கி
காரியத்தில் கண் கொண்டார்
கருஞ்சட்டை தனை
கழற்றிவிட்ட பொறுப்பற்ற மனிதரானார்

காலம் கடந்து யோகம் பெற்ற ஞானியாகி
கடவுள் இல்லை என கடுமுழக்கம் செய்திடுவார்
கட்சி தேர்தலில் வென்றிட
கடவுளே துணை என தொழுதிடுவார்

கண்மூடிக் கிடக்கும் சமூகத்திற்கு
வழிகாட்டும் கதியென்பார்
கண்கட்டு வித்தகனாகி
மக்களை முட்டாளாக்கிவிட்ட
கலியு சுயமாயாதை சுடர்களே போதும் உங்கள்
திருவிளையாடல்
கடவுளர்கள் போததென்று
நீங்கள் வேறு பாவம் நாங்கள்

No comments: