சீர் மிகு சித்திரைத் திங்கள்
பார் போற்றும் பத்தாம் நாள்
சிறப்புற வந்தாள் எங்கள்
பத்தரை மாற்று சித்திரச் செல்வி
இராயிரத்தோழு ஏப்ரல் திங்கள்
இருபத்து மூன்று - ஓன்பது.
முப்பத்தொன்பது மணிக்கு
முத்து மணி சுடர்விழி முகம் கண்டோம்.
அன்பே! ஆருயிரே!
அழகு மலர் கொடியே!
ஆண்டவன் எமக்களித்த
அளவில்லாப் பெருங்கொடையே!
அமுதத் தேன் துளியே!
ஆழிப் பொன் முத்தே!
இன்பம் சேர்க்க வந்த
இணையில்லா பண்ணிசையே!
தென்பொதிகை தவழ்கின்ற
தென்றலோடு கலந்து வந்த
இளங்குறிஞ்சி மலரிகளின்
இனிய வசந்தமே!
துள்ளும் இளமானே!
துளிர்விடும் பசுந்தாளிரே!
துயர் தீர்க்க வந்த
தூண்டா விளக்கொளியே!
மழலை கீதம் பாடி வந்த
மாணிக்க பூங்குயிலே இனி
எங்கள் வாழ்வின் வழி
எங்கும் பொங்கும் இன்பம்
பிஞ்சுக் கைகள் பிடித்துக்
கொஞ்சி மகிழும் போது மென்
பஞ்சுக் கால்கள் இரண்டும் என்
நெஞ்சு தொடும்
கட்டித் தங்கம் வெட்டியெடுத்து
குட்டிப் பூக்கள் கொட்டிப் பரப்பி
குளிர் சந்தணக் குழம்பினில் குழைத்தெடுத்த தென்
குமரி கடல் முத்து அவள்
பசும் பொன்னெழில்
பாச்சிளம் குழவியவள்
பாச் சுவையில் செந்தமிழாள்
பழச் சுவையில் தேன் மொழியாள்
பனிக்குவளை சிறு விழியாள்
பால் பொங்கும் பூமுகத்தாள்
இனிமை தரும் மழலை கீதமவள்
இனிக்கின்ற இ ளாநகையாள்
உதயத்தின் வசந்த காலம் அவள்
உவகை தரும் இன்ப கோலம்
உள்ளத்தின் உண்மை வெளி
உயிருக்குள் உயிர்த்தெழுந்த உயிரின் ஒளி
அழகிய மணிக் கொடி அவள்
குலத்தில் பெருங்குடி
அமுதின் தாய் மொழி அவள்
குணத்தில் சுடர் ஒளி
கீதம் தந்த கீதை
கிழக்குச் சுடரொளி கோதை
இளமதி இளவரசி எங்கள்
இயற்றமிழ் எழிலரசி வாழ்க! வாழ்க!
No comments:
Post a Comment