Wednesday, November 15, 2006

பாலைவனம் உண்டானது ஏன்?

பாலைவனம் உண்டானது ஏன்?
முதன் முதலில் கடவுள் உலகத்தைப் படைத்த பொழுது உலகம் பசுமையாகவும் கனி மரங்களும் நிறைந்து மிக அழகாக இருந்தது.பாலைவனமே இல்லை.
அதன் பின் கடவுள் இந்த உலகத்தை பார்த்துக் கொள்ள மனிதனைப் படைத்தார்.மனிதனைப் பார்த்து அவர் “நீ ஒவ்வொரு முறை பாவம் செய்யும் போதும் வானத்தில் இருந்து சிறிதளவு மணல் பூமியில் கொட்டும். கவனமாக நடந்து கொள்” என்று கூறி மறைந்தார்.
“இவ்வளவு பரந்த பூமியில் சிறிதளவு மணல் விழுவதல் என்ன கெடுதல் நிகழ்ந்து விடப் போகிறது ? என் விருப்பம் போல் வாழ்வதில் எந்தத் தவறும் இல்லை” என்று நினைத்தான் மனிதன்.

தன் விருப்பம் போல பாவங்கள் செய்யத் தொடங்கினான் அவன். ஒவ்வொரு பாவத்திற்கும் சிறிது மணல் பூமியில் விழுந்தது. தொடர்ந்து பாவங்கள் செய்து வந்தான் . அதனால் மணல் விழுந்து விழுந்து ஏராளமான பாலைவனங்கள் பூமியில் தோன்றின.

கலா ப்செட் காலண்டர்ஸ் சிவகாசி -626 189 வெளியிட்ட நன்னெறிக் கதைகள் நூலில் இருந்து.
சு.பா

2 comments:

கார்மேகராஜா said...

உங்களது ப்ளாக்கர் கணக்கில் சென்று

settings-> comments ல் enable comment moderation ல் yes என்று கொடுத்து

கீழே உங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும்.

இப்படி செய்தால்தான் யாரவது கமெண்ட் போட்டால் நீங்கள் படித்து பார்த்து மட்டுறுத்தல் செய்ய முடியும்.

யாழ்.பாஸ்கரன் said...

Thanks கார்மேகராஜா