Thursday, September 18, 2008

மனசு கேட்கல

ஒரு ரூவா காசுக்கு இங்கே
ஒரு கிலோ அரிசி விற்கிறாங்க - ஆனா
மற்ற பொருள் விலைகள்யெல்லாம்
மண்ணத் தாண்டி விண்ணத் தொட்டு
மாசக் கணக்கு ஆகிடுச்சு

எண்ணெய் விலை என்ன விலை
ஏழைகளால் எண்ணிபார்க்க முடியவில்லை
எரிபொருட்கள் எல்லாமே உலகச் சந்தையிலே
ஏறினாலும் இறங்கினாலும் இங்கே
எற்றியது எற்றியது தானே

நியாயவிலை கடையில தானே
நாங்களும் தாருவே மலிவு விலை
மளிகைப் பொருள் என்று தமுக்கடிச்சாங்க – ஆனா
மாசையும், தூசையும் அள்ளி வந்து
மக்கள் தலையில கட்டுறாங்க

பசியில் எரியும் வயுற்றுடனே
படியரிசி வாங்கத்தானே
பாவி மக்கள் பகலெல்லாம்
வரிசையிலே கால்வலிக்க
காத்துக்கிடக்குறாங்க

நல்ல பொருளையெல்லாம்
இல்லை இருப்பு என்று
இமைப்பொழுதில் இழுத்து கதவடைத்து
கொள்ளையடித்துச் சென்று
கள்ளச் சந்தையிலே காசு பார்க்குறாங்க

மின்னலா வந்து போகும் மின்சாரம்
மீண்டும் எப்ப வருமென்று தெரியாது
முடிஞ்ச பார்த்துக்குங்க கண்ணாற
இருட்டில் இருக்கும் நமக்கு இங்கே
எல்லாமே இலவசமாம் சொல்லுறாங்க

முழு நாளும் உடல் வருத்தி
மூட்ட தூக்கி வண்டியிழுத்து
காடு மேடு அலைஞ்சு திருஞ்சு
பாடுபட்டு உழச்ச பணத்தை
வீடு கொண்டு சேர்க்க முடியல

காலை, மாலை, இரவு என எந்நேரமும்
மூலைக்கு மூலை மதுக் கடைகள்
மூடாமலே திறந்து கிடக்குது -ஆனா
மூளை வளர்க்கும் பள்ளிக்கூடங்கள்
மூடித்தானே கிடக்குது திறக்காமலே

பள்ளிக்கூட பிள்ளைகள் எல்லாம்
படிப்ப மறந்து குடியை பழகி
மதுக்கடை வயிலிலே தவகிடக்குறாங்க
புத்தகப்பை பிடித்த கையில்
புட்டி மதுவை ஏந்தி மகிழ்கின்றார்

மதுக்கடை வருவாயால் தானே
மாநிலத்தில் அரசு தலை நிமிர்ந்து நடக்குது -ஆனா
முட்டாளு சனங்களெல்லாம்
முட்ட முட்ட குடுச்சுப்புட்டு தலை கவிழ்ந்து
முச்சந்தியில் விழுந்து கிடக்குது

உன்னை, என்னை,ஊர ஏய்ச்சுப் பிழைக்குறாங்க
உள்ளதச் சொன்னா உதைக்கிறாங்க
எடுத்துச் சொன்னா எதிர்க்கிறாங்க
என்னமோ நடக்குது எதுவும் புரியல
ஏனோ தெரியல என் மனசு கேட்கல

No comments: