விழிதிறந்தால் ஓளி பிறக்கும்
விழிகளை மூடிக்கொண்டு
விடியலை தேடாதே
ஒளியலை உள்வர
விழிஇமைகளை வெளித்திற
சாம்பல் படிந்துவிட்ட
சோம்பல் முகத்தின்
தூசுகளை தட்டி
துள்ளி எழு
மண்ணுக்குள் புதைந்து போன
நேற்றைய புதையலைத் தேடாதே - உன்
கண்ணுக்கு முன் விரிந்த விளைநிலத்தில்
இன்றைய விதைகளைத் தூவு
நாளை அது நல் விளைச்சல் தரும்
அல்லும் பகலும் அயராது போராடு
உள்ளும் வெளியும் உனை
உழைப்பு கொண்டு உயிர்ப்பி
உயர்வு நிச்சயம்
உன் சேவை தேவையானால்
உனது உழைப்பு உண்மையானால்
உலகம் ஒரு நாள் உனை
உற்று நோக்கும்
பற்றிகொள் பாரோரின்
பார்வை ஒளியை
பார்த்துச் செல்
பழியிலா பாதை வழியே
அனைத்தும் உனைத் தேடிவரும்
அமைதி கொண்டு அனுகு
அன்பு கொண்டு பழகு
இன்பம் என்றும் உனதாய் இனிக்கும்
சு.பா
விழிகளை மூடிக்கொண்டு
விடியலை தேடாதே
ஒளியலை உள்வர
விழிஇமைகளை வெளித்திற
சாம்பல் படிந்துவிட்ட
சோம்பல் முகத்தின்
தூசுகளை தட்டி
துள்ளி எழு
மண்ணுக்குள் புதைந்து போன
நேற்றைய புதையலைத் தேடாதே - உன்
கண்ணுக்கு முன் விரிந்த விளைநிலத்தில்
இன்றைய விதைகளைத் தூவு
நாளை அது நல் விளைச்சல் தரும்
அல்லும் பகலும் அயராது போராடு
உள்ளும் வெளியும் உனை
உழைப்பு கொண்டு உயிர்ப்பி
உயர்வு நிச்சயம்
உன் சேவை தேவையானால்
உனது உழைப்பு உண்மையானால்
உலகம் ஒரு நாள் உனை
உற்று நோக்கும்
பற்றிகொள் பாரோரின்
பார்வை ஒளியை
பார்த்துச் செல்
பழியிலா பாதை வழியே
அனைத்தும் உனைத் தேடிவரும்
அமைதி கொண்டு அனுகு
அன்பு கொண்டு பழகு
இன்பம் என்றும் உனதாய் இனிக்கும்
சு.பா
No comments:
Post a Comment