Monday, November 13, 2006

தாய் வாழ்த்து



அனைத்திற்கும் மூத்தவளே
ஆண்டு பல கோடி பார்த்தவளே
இளமை இன்னும் குறையாதிருப்பவளே
ஈறு காண இயலா தோற்றம் உடையவளே
உலகம் உள்ளவரை நிலைப்பவளே
ஊர் முழுதும் பேசும் உயர் சிறப்புடையவளே
எண்ணிலா வளமை புதுமை கொண்டவளே
ஏற்றம் பல ஏற்று வளர்பவளே
ஐந்திணை மாந்தர்க்கும் இலக்கணம் அமைத்தவளே
ஒழிந்தழிந்து செத்த மொழிகளிடை
ஓங்கி தழைத்துயர்ந்தவளே
ஓளவை மூதாட்டி மடி தவழ்ந்தவளே
இதெலாம் உன் உயர் சிறப்பென
கண்டுனை போற்றுகிறேன்
காலம் பல கடந்து என் தமிழ்
சந்ததி நாளும் வாழ்ந்து வளர்ந்து
சாதனை படைத்திட அருள்வாய் தாயே
சு.பா

No comments: