Monday, February 25, 2019

பசுமை தாய்நிலம்


நன்றி-http://www.vallamai.com

பச்சை தலைப்பாகட்டி  பளபளக்க வரிசையிலே
பச்சை தண்ணீர் நெகிழி போத்தல்கள் -நாம்
எச்சிலாக்கி எறிந்த பின் மக்கி நெகிழாமல்
பசுமை தாய்நிலத்தின் நலம் சாய்க்கும் பகைவர்கள்

வழக்கம் மாறினால் வானமே எல்லை  நெகுநெகு நெகிழிகளை
வழியனுப்பி வைப்போம் பிள்ளைகள் நாங்கள்
வாழும் பூமிக்கோளம் மாசின்றி மலர்ச்சியுற
வையகம் வாழ வழிமுறை காண்போம்

மடமடவென மண்பானை தண்ணீரை குடித்துவிட்டு
மளமளவென மண்வெட்டியால் நிலம் கொத்திய
முப்பாட்டன் காலத்தின் சூழல் நோக்கி முழுமனதுடன்
முதல் அடியை எடுத்து வைப்போம்

மண்பாண்ட குவளைகள் எல்லாம்
மரியாதை பெற்றே மனையேறட்டும்
மக்காத மாசான நச்சு குப்பைகள் எல்லாம்
மனம் மாறி மலையேறி வெளியேறட்டும்

மாசில்லா உலகே மகிழ்வான சுவர்னம்
மக்காத பெருளாலே நிகழ்மே உயிர்களின் மரணம்
மனம் நெகிழ்ந்தே நெகிழிகளை ஒழிப்போம்
மண்ணுயிக்கு வாழ்வளித்து மகிழ்வோம்

மானிதனின் தேவைக்கு தாயாகும் இயற்கை
மாறாத அவன் பேராசைக்கு பாலியாகிது இது செயற்கை  
மாறுவோமே மாற்றுவோமே இனி மண் சிரித்து பொன்னாகும்
மரம் வளர்ப்போம் உலகு அழகாகும்

No comments: