Saturday, August 01, 2015

வா வா வா






கலாம் கண்ட மாணவமணிகளே வா வா வா
கனவு கண்டு சிந்தை கொண்டு செயல்புரியலாம் வா வா வா
காலத்தை வெல்லும் இளையோர் கூட்டமே வா வா வா
கடும் முயற்ச்சியாலே ஞாலத்தலமை கொள்ளலாம் வா வா வா
வாழ்வில் நேராய் நடந்து வென்று காட்டலாம்  வா வா வா
வறுமை ஒழித்து வளமை காணலாம் வா வா வா


 
அக்னி சிறகினை விரித்து மேலே மேலே பறந்து செல்லலாம்  வா வா வா

அறிவுத்தீபம் ஏற்றி, அதை அணையாது சுடர்விடச்  செய்யலாம் வா வா வா
அறிவியல் துணைகொண்டு அண்ட வொளியில் தவழலாம்  வா வா வா
இலட்சியம் ஒன்று கொண்டு எல்லை சுவர்களைத்  தகர்க்கலாம்  வா வா வா
சக்தி கொண்டு உழைத்து படித்து சாதனைகள் பல படைக்கலாம் வா வா வா
சாதி, மத, இன, மொழி வேற்றுமைகள் ஒழிக்கலாம் வா வா வா

 


ஏழ்மை அகற்றி ஏற்றம் காணலாம் வா வா வா

எளிமையாக வாழ்ந்து எல்லோரும் சமமாகலாம் வா வா வா
துன்பப்படும் மக்களின் துயர்துடைக்கலாம் ஓடி வா
இன்பமான பொழுதின் விடியலை எல்லோரும் காணலாம்  வா வா வா
நல்ல மனிதர் நமது கலாம் கண்ட கனவை செயலாக்கலாம் வா வா வா
நமதருமை தாயகத்தை நல்லபடி முன்னேற்றலாம் வா வா வா

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பிற்கு சிறப்பு சேர்த்தமைக்கு நன்றிகள் பல...