வெற்றி தேடும் வியர்வைத் துளிகளின் விடா
முயற்சி
வெற்றிடங்களை எல்லாம் வெற்றியின் இடங்களாக்கும்
வேள்வித் தீயின் அணையாத அக்கினிக் குஞ்சு
வெல்லும் அணியின் வெல்ல இயலாத ஆன்மபலம்
உற்பத்தி இயந்திரத்தின் உடைக்க இயலாத பற்சக்கரம்
வெற்றி சுவர்னத்தின் ஒற்றைத் திறவுகோல்
எட்டாதவற்றையும் எட்டபிடிக்கவைக்கும் ஏணியின் முதற்படி
விட்டு விடாமல் தொடரும் முழு முயற்சியின் மூல உயிர்ப்பு
வாழ்க்கை வயலுக்கு நெற்றி வியர்வையால் நீர் வார்த்து
வளமான வெற்றி விளைச்சல் தரும் வற்றாத ஜீவநதி
கட்டுதலைகளை வெட்டி எறியும் முயற்சியின் கைவாள்
காட்டுக் களைகளை பிடுங்கி வீழ்த்தும் களைப்பறியா காவலன்
கவலை நோய்தீர்க்க மா மருந்து தரும் கற்பக தரு
களைப்பு சுமை தந்தாலும் வெற்றிப் பரிசளிக்கும் விந்தை
உடல் வளைத்து இளைத்துக் களைத்தாலும்
உள்ளம் களைப்பில்ல நல்ல உழைப்பே வெல்லும்
உண்மை உழைப்பே உழைபவர் பெயர் சொல்லும்
உழைப்பே உயர்வு தரும் ஆதலால் உழைப்போம்
No comments:
Post a Comment