Thursday, December 04, 2025

ஈதலே இறை

 

ஈதலே இறை                                                                                   03/12/2025

இருக்கும் பொருள் எல்லாம்
இல்லாருக்கு ஒன்று ஈவதற்கே- ஈதலே
இன்பம் பெருக்கும் -செல்வம்
சேர்த்தே செய்வது என்பது
துன்பம் பயக்கும் -துணிக
துயிக்காத பொருளால் ஏதும் கிட்டாது
துளி கூட அருளும் ஒட்டாது
துளியள வாயினும் ஈக இல்லாருக்கு
 
பழியில்லா பொருள் நிதம் தேடி
பலரோடு பகுத்துண்ணாமல்
படுகுழியில் புதைத்து பூதமாய்
பக்கதுதிருந்து பாதுகாத்து விட்டு
பாழ் குழியில் படுக்கப் போகையிலே
பரம் பொருளின் அழியாத
பேரருள் வேண்டல் விழிப்
பார்வையிலான் காணும் விடியல் போலே
 
மீட்டாத யாழும்
தீட்டாத வாளும்
கேளாத பண்ணும்
வீழாத வான் மழையும்
விழுந்து முளையா வித்தும்
எழுந்து முளைத்தும் விளையா பயிறும்
பழுத்தும் பறவை கொத்தா கனியும் இருபதில்
பயன் என்ன விளையும்

மெய்ப் பொருள் கண்டால்
கைப் பொருள் தேவையில்லை
வைப் பொருள் எங்கும் உடன் வருவதில்லை
மை இருள் வழியினிலே
கை விளக்காதல் ஈதல் ஒன்றே
உயிர் உய்திட உறு துணை
பொய்யிலா அறமே அதைவிட
பொருத்தமானது ஏதுமில்லை
 
பசிப்பவர்க்கு உணவு கொடு
புசிப்பவர்க்கு உணவாகு நீ
வசித்திடலாம் அவர் எண்ணங்களில்
வாழ்ந்திடலாம் அவர் உள்ளங்களில்
எளியவர் வாழ்வு ஏற்றம் பெற
எழைகள் யாவரும் வலிமை பெற
அறமே செய்ய விரும்பு அனைத்திற்கும்
அருமருந்தாகும் அஃதே
 
படு துன்பப் படு
படுவதனால் பயன்படு பிறருக்கு
படு பயப் படு
படுவதனால் தெளிவுபடு
படு பாடு படு
பாடுபட்டதால் சிகரம் தொடு
படு பயணப் படு
படுவதனால் பாதை கெடு பிறருக்கு
 
சடுகுடு ஆட்டம் வாழ்க்கை
சடுதியில் முடிந்து விடும் ஓட்டம்
இடு காடு கூட இடம் தராது
இடுப்பரைஞான் கூட கூட வராது
இருப்பதைக் கொடுப்போம்
இழப்பு ஏதுமில்லை
இன்புற்று இருப்போம்
இன்னல் துளியுமில்லை
 
விடு ஆசையை விடு
விடு விடை காண வாழ்க்கையிது
விடுமுறை கால வாசதலம் இது
விடு இடையினல் வந்து
விடு இடைவிட்டு வெட்டி விடு
விடு விட்டு விடை கொடு
விடு விடு என
விடுதலை கிடைத்து விடும்
 
கொடு முடியும் மட்டும் கொடு
கொடுமை இல்லா மனம் கொண்டு
கொடு கொடுக்க முடியாதனவெல்லாம்
கொடு தடுக்க தடை ஏதுமில்லை
கொடு  அளவில்லா கொடை கொடு
கொடு அன்பினால் அனைத்து கொடு
கொடு உன்னையே பிறருக்கு கொடு
கொடு முடியில் உன்னை தாங்கும் உலகு
 
தடு தீயவை யாதாயினும் தடு
தடுமாறாமல் தடம் மாறாமல்
தடுப்பதனால் விடுதலை கிடைக்கும்
தடு தடையாய் இருக்கத் தயாராகி
தடு தவறுகள் யாதாயினும் தடு
தடு தன்னலமில்லாது தட்டிகேட்டு
தடு தடையும் ஒரு தவமே
தடுப்புகளே தவறுகளைத் தடுக்கும்

கூடவே இருப்பதெல்லாம்
கூடவே வருவதில்லை
கூட்டை உடைத்து
கூட்டிச் செல்லும் கொடுங் கூற்று
கூட்டணி சேர்ப்பதில்லை
கூடுவிட்டு ஆவி போகும் முன்னே
கூடு மட்டும் கொடுத்திடுவோம் கொள்வார்க்கு 
கூடு மட்டும் விட்டு செல்வோம் அன்போடு
 
நீயே பறை அதை அறை
நீயே நீள் வரை அதை  மறை
நீயே திரை அதை விலக்கு
நீயே கரை உடைத்து நிறை
நீயே சிறை அதை தகரத்து விரை
நீயே மறை  அதை உணர்வில் உறை
நீயே இறை அதை உன்னுள் நிறை
நீயே நிறைவு - தேடு தாள் திறக்கும்
 
ஒளி சேர் இறையில் ஒன்றிட ஓர்
வழி சொல்வேன் கேள் தட்டாது
வெளி எங்கும் நிறை ஒளி காண
வழிகள் பல போகும் - ஈதலின்
ஒளியால் உள் இருளகற்று
ஒழியும்  எல்லாம்- விழிகளின்
களிப்புடனே கட உள் அன்பின்
மெழியாய் கடவுள் காண்பாய்

 

ஆக்கம் ;  Date : 04/12/2025 யாழ்நிலா. பாஸ்கரன் TNPL School ஓலப்பாளையம் கரூர்- 639136
Cell : 9789739679

விற்பனை திருவிழா

வீசப்படும் வலை

பேசப்படும் விலை

தேசப்பற்றிற்குச் சிலை

வேசம்போடும் நிலை

 

மனசாட்சிகள் களையப்பட்டு

மன்னராட்சியாய் அரசர்கள் மட்டும்

மணிமகுடம் சூடும் மகுடிவித்தை

மக்களாட்சிக்கு  இந்த மண்ணே சாட்சி

 

கூட்டுக் கொள்ளையின்

கூட்டாஞ்சோற்று கூட்டாளிகள்

கூடாரம் அமைத்து கொள்ளையடிக்க

கூப்பாடு போடுகிறார் கொள்கை கோட்பாடென

 

குள்ள நரி கூட்டங்கள்

நல்லதொரு வேடங்கள்

வெல்லக்கட்டி பேச்சுக்கள்

கள்ளத் தனமே மூலதனம்

 

கத்தை கத்தையாய் காசு கட்டுகள்

வித்தை விதைத்து அவன் அறுக்க

சொத்தைக் காசுக்கு விலைபோகும்

ஒத்தை விரல் இழந்த ஏகலைவர்

 

குட்டியானை வண்டியிலேறி

வெட்டிபயல்களின் பின்போவோம்

பட்டியாடு போலேயவன் நமையடைத்து

கட்டுகதைப் படம் காட்டி மொட்டையடித்திடுவர்

 

பட்டைசோறுக்கும்

புட்டி மதுவுக்கும்

பாதையோர ஞமழிகள் போல

போதையேறி சுற்றி வருவோம்

 

அணிமாறும் ஆட்சிமாறும்

இனி இல்லை கூட்டு என கூவிடுவார்

ஈனப்பிறப்பாய் மக்கள் கூட்டம்

உழைத்து பிழைக்க மறந்து ஓடும் மந்தையாடுகள்

 

ஊழலுக்கும் கையூட்டுக்கும்

ஐயமின்றி அளிப்பார் வாக்கு

எழுத்து எல்லாம் என்று ஏமாறுவர்

ஏய்பவனை சாய்க்காமல்

 

வாக்கு வங்கிகளாய் வாக்காளர்கள்

வாக்குறுதி வைப்புத் தொகைகளில்

வக்கற்ற மக்கள் விலைபேசி விற்க-

வாக்கு விற்பனை திருவிழாவாய் தேர்தல்

 

குடவோலை செய்து

முடியாட்சியிலேயே

குடியாட்சி செய்த

மூத்தோர் வழிதோன்றல்களா நாம்?

 

பட்றிவும் இல்லை

பாட்டன் இட்டறிவுமில்லை

பட்டினி வயிற்றுக்காக

பட்டியில் மிதிபட்டுச் சாகிறோம்

 

விடுதலைக்காக  விட்டு

விடுதலையான உயிர்களின் வலி

விடுமுறைக்கால கணக்கின்

விடுதல்கள் நமக்கு  தெரியாது

 

வீட்டுக்கு வீடு

ஓட்டுக்கு காசு

நாட்டுக்கு கேடு

நல்லதை தேடு வெல்க நாடு

ஆக்கம் ;

Date : 03/12/2025

யாழ்நிலா. பாஸ்கரன்

TNPL School

ஓலப்பாளையம் கரூர்- 639136

Tuesday, December 02, 2025

மணவறை காணாத மலர்கள்

மணவறை காணாத மலர்கள்

மணச் சந்தையிலே மணமில்லா மலரா நீ
பணச் சந்தையிலே பசையில்லா தாளா நீ
குணச் சிந்தையிலே கோமகள்(ன்) தான் நீ
பண்பு இருந்தென்ன ? கொள்வாரில்லை

வாழ்க்கை துணை தேடி வாடும் பொழுதுகள்
வழித்துணை ஒன்று கிட்டுமா என்ற ஏக்கம்
தலை சூடா பூக்காட்டு மலர் போல- நாளும்
இலை உதிரும் நாள்காட்டி தாளாக

எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கும்
என்ற மூன்றாம் இயக்க விதி கூட
எடை போடும் சமுதாயத்தில்
ஏழைகளுக்கு மட்டும் விதி விலக்காய்

ஏங்கி வாடும் எழில் வனப்பு பருவம்
எங்கோ ஒலிக்கும் மங்கள மணநாதம்
எரிமலை வெடிக்கும் உள்ளத்தில்
ஏக்கங்கள் பல தூக்கத்தை தொலைக்கும்

பிழைகள் என்ன ? பிரிவுகள் ஏனோ ?
பிழைத்தல் யாவருக்கும் பொது தானே
இழைத்திடல் தகுமோ இன்னல்
இது எவர் செய்த சதி வலை பின்னல்

கை கூடுகிறது காதல் கூட
கையிருப்பை சரிபார்த்த பின்தான்
மனங்களின் இணைப்பு கூட
பணத்தாள் எண் கூட்டைக் கொண்டுதான்

முடிவில்லா தொடரியாய்
முதிர்கின்ற வயது
முற்றிய கதிர்களாக
முதிர் கன்னி(ண்ணன்)கள்

மணவறை காணாமலே மலர்கள்
மண்ணறை நோக்கி சரிகின்றன
மனநிலை மாறாத சமூகம்
மண்ணில் இன்னலை விதைக்கிறது

வினைப்பயனா ? விதிப்பயனா?
விடைபெறுமா? தடையறுமா?
எடைக்கற்கள் இல்லாத உறவுகள்
எங்கேனும் எப்போதாகிலும் துளிர்விடுமா?

Sunday, November 16, 2025

வாடாதே

 வறுமை வந்தால் வாடாதே 

வெறுமை என்று ஓடாதே 

பொருமை கொண்டு போராடு

 பெருமை வந்து உனைச் சேரும்


 இரு கை விரல்கள் பத்து 

இறைவன் அளித்த சொத்து 

முயற்சி ஒரு பொன்வித்து 

பயிற்சி எடு விளையும் நல்முத்து

 

 தேடினால் கிடைத்திடும் வழி 

வாடினால்  தடை படும்  ஒளி 

ஓடினால் திறந்திடும் வெளி- விழி

ஓய்தலை இன்றோடு ஒழி


 உழைக்கத் துணிந்தால் 

உலகம் உன் துணை வருமே 

உனது வியர்வைத் துளியினிலே 

உயர்வு விருட்சம் உயிர் பெருமே


 வென்றவன் எல்லோரும் தோற்றவன் தான் 

தோல்வி என்பது வெற்றியின் தொடர் நிலை தான்

தோற்றுப் பார் துலங்கும்

தோல்வியும் ஒரு வெற்றி என விளங்கும்


 வெற்றி என்பது எல்லோருக்கும் பொது 

வெளியில் இல்லை அது உன் உள்ளத்தின் கரு 

வெள்ளத் துணிந்தால் மெல்ல திறக்கும் 

வேதனை மறைந்து புது உலகம் பிறக்கும்


 பயணத்தின் பாதை சரியாக 

பார்வையின் வீச்சு நேராக 

பழகிட வேண்டும் சீராக 

பண்புகள் வளரும் சிறப்பாக 


நாளும் பொழுதும் கற்றிடு 

நல்லவை யாவும் பெற்றிடு 

ஆளுமை பண்பை வளர்த்திடு

அமைதி வழிதனில் வாழ்திடு


வரும் சோதனைகள் நம்  தரம் பார்க்கும் 

வந்த வேதனைகள் நமக்கு தடம் காட்டும் 

வாழ்வில் சாதிக்கப் பிறந்தோமே நின்று

வற்றாத சாதனை என்றும் நமதென்று


Friday, November 14, 2025

சின்ன சின்ன பூக்கள்

 சின்ன சின்ன பூக்கள் இங்கே

 

சின்ன சின்ன பூக்கள் இங்கே

வண்ண வண்ண ஆடைசூடி

வானவில்லாய் மலர்ந்திருக்க

வையமெங்கும் அன்புமழை பொழிகிறது

 

மின்னல் மின்னும் விழிகளிலே

மின்சார மொழிப் புன்னகையில்

மின்மினிகள் சிரிக்கையிலே

எண்ணிலா எண்ணங்கள் ஒளிர்கிறது

 

கண்ணாண கண்மணிகள்

கற்கண்டு பொன்மணிகள்

வெண்ணிலவு ஒளி முகத்தில்

வேடிக்கை குறும்புகள் வழிகிறது

 

கொண்டாடும் இடத்தினிலே

குழந்தைகள் தினத்தினிலே

கொஞ்சும் மழலை மொழிதனிலே

நெஞ்சம் மகிழ்ந்து தெளிகிறது

 

துள்ளிவரும் மானாக

பள்ளிவரும் பிள்ளைகட்க்கு

சொல்லித்தரும் அறிவுடனே - அகமகிழ

அன்பும் அள்ளித் தருவார் ஆசிரியர்

 

அன்புக் குழந்தைகளே

அறிவு பாலருந்த

அன்னையர் கரம் பிடித்து

ஆசையாய் தினம் பள்ளிக்கு வருவோம்

 

காலத்தால் அழியாத கல்விதனை

காலத்திலே கருத்தாய் கற்று

கனிவுடனே கற்பிப்போம் ஞாலமெங்கும்

கலங்கரை விளக்காகவே ஒளிவீசுவோம் நாளெல்லாம்

  

 
ஆக்கம் ;

 

Date : 14/11/2025

யாழ்நிலா. பாஸ்கரன்

TNPL School

ஓலப்பாளையம் கரூர்- 639136
Cell : 9789739679                                                       

Tuesday, March 11, 2025

இனிது இனிது

      இனிது இனிது


வறுமை வாட்டினும் கற்றல் இனிது

பெருமை மிகு அவையில் வாக்குத் திறன் இனிது

பெருத்த செல்வம் பெற்று இருப்பினும்

வருத்தி உழைத்து வாழ்வது இனிது



பொருளுடையவன் ஈகை இனிது

அருளுடைய சான்றோன் துணை இனிது

அருந்துணையின் மனம் அறிதல் மிக இனிது

அருமை நட்பு அதனினும் இனிது



குறையில்லா செல்வம் இனிது

குறையாத குணமுடை கல்வி இனிது

குற்றமில்லா ஒழுக்கம் இனிது

முற்றும் துறத்தல் நன்கு இனிது



மாண்புடை மானம் இனிது

மானமிழந்து வாழாமை இனிது

மனம் அஞ்சா வாழ்வினிது

மாற்றுக்குறையா மறம் இனிது



கற்றர் முன் கவியுரைத்தல் இனிது

கல்லார்க்கும் கல்வி ஈதல் இனிது

கயவர் கை சாராமை இனிது

கடுஞ்சொல் கலவாமை இனிது



நன்றி மறவாமை நட்பிற்கு இனிது

நல்வழி பிறழாமை வாழ்விற்கு இனிது

நடுநிலை தவறாமை நீதிக்கு இனிது

நாடியவர் துன்பத்தை நீக்குவது இனிது



ஆய்ந்து அறிதல் அறிவுக்கு இனிது

ஆராய்தல் அதனினும் இனிது

அழுக்காறு இல்லாமை இனிது

அடுத்தவர் பொருள்க்கு ஆசைபடாமை இனிது



சினம் கொள்ளாமை இனிது

சிற்றினம் சேராமை இனிது

சிறுமதியோர் உறவு கலவாமை இனிது

சீற்றம் இல்லா சொல் இனிது



வறிநிலையாயினும் வாய் திறாவமை இனிது

வம்பில்லா வாழ்கை இனிது

விதை பொருளை உண்ணாமை இனிது

விளை பொருளை மறைக்காமை இனிது



இன்சொல் இனிக்க சொல்லுதல் இனிது

இன்சுவையாவிலும் நகைசுவை இனிது

இனிய சுற்றம் சூழ வாழுதல் இனிது

இனிது இனிது எல்லாம் எங்கும் எவர்க்கும் இனிது



இயலிசை நாட்டியம் இனிது

இயற்கை வழி நடத்தல் இனிது

இன்பம் பொங்க வாழ்தல் இனிது

இனிய மனம் இன்பத்தில் எல்லாம் இனிது



கருத்துதவி ; இனியவை நாற்பது-

விரும்பினால் முளைக்காது

விரும்பினால் முளைக்காது விதை












விரும்பினால் முளைக்காது விதை
விதைத்தால் தான் முளைக்கும்
வருந்தி உழைக்காது
வாழ்வு உயராது -நீ உணர் அதை

கனவுகள் கண்ணாடியை போல
கவனித்தால் முன்னேறிப் போகலாம்
கவலைகள் காற்றுக் குமிழ் போல-உடைத்து
கடந்தால் களிப்புடன் வென்றாடலாம்

சோம்பல் எப்போதும் சோறிடாது
சோர்வில்லா உழைப்பு சோம்பல் தராது
சேரிடம் தெளிந்தால்
செல்வதில் வெல்வதில் தடையிருக்காது

வெட்டிப் பேச்சுக்களை வெட்டிப்போடு
வீணர் கூட்டத்தை விட்டு வெளியேறு
விசையுறும் வலிமை நிறைந்தது இளமை
விளைந்த ஆற்றலை வீணாய்யாக்குதல் மடமை

விரி வானே உன் எல்லை
வீணாய் இருந்தால் வெற்றியில்லை
விடமுயற்சியால் தோல்வியில்லை
விழித்திடு உழைத்திடு வீழ்ச்சியில்லை

முயற்சித்த மனிதன் வீழ்ந்ததில்லை
முடியாதென்பது உலகில் இல்லை
முயலாமை வெல்வதில்லை
முயன்று பார் துன்பமில்லை

வீழ்வதில் தவறில்லை
விதி என வாழ்தல் சரியில்லை
வீருகொண்டு எழு
விலங்குகள் அறு விடுதலை பெறு

வில்லின் வேகம் நாண் வளையும் வரை
வேலின் வேகம் கைபின் செல்லும் வரை
வெற்றியின் வேகம் முயற்சிக்கும் வரை
வெல்வதன் நோக்கம் நேர்வழி செல்லும் வரை

சிற்பமாய் சிலை சிரிக்க சிற்பியிடம்
சீராக தலையில் அடிவாங்கும் உளி
சிகரங்களின் உயரம் தொட உழை
சிந்தித்து செயல்படு வலி திறக்கும் வழி

எல்லோரும் ஓர் நிறையே
ஏழ்மை என்பது நிலையல்லவே
ஏன் என்ற கேள்வியால் தான்
எழுந்திடும் விடியலின் புத்தொளிதான்

தாழ்ந்தவர் யாரும் தரணியில்யிலை
தளர்ந்தவர் யாரும் வென்றதில்லை
தேனடை கூட முழுகூடகும் சிறு ஈகளாலே
தேய்பிறை கூட வளரும் முழுமதியாக

தொலைதுர பயணத்தின்
தொடக்கம் முதல் அ(ப)டியில் தான்
தொட்டுவிட துணிந்தால்
தொடுவானம் கூட காலடியில்தான்

தேடலே இன்பம் தேடலே வாழ்வு
தேடலுக்கு இல்லை முடிவு
தேடாமல் இல்லை விடிவு -தேவையின்
தேடலே கண்டுபிடிப்பின் தாய்

செக்குமாட்டு வாழ்கை தேவையில்லை
செதுக்கு உன்னை செயல் கொண்டு
கொக்குபோல காத்திரு
கெக்கிபோட்டு தூக்கிடு

செய்வன செய் திருந்த
செய் செலவுகள் வரவறிந்து
செயலில் இறங்கு
செய் தொழில் பல

பாறையிலும் வேர்விட்டு
பசுஞ்செடி தளைக்கும்
பற்றுக் கொம்பு ஊன்றி பாங்காய் வளர்த்தால்
படர்ந்து பூத்து காய்த்து கனியும்

நம்மிரு கைகளின் துணை கொண்டு
நன்னடை கால்களின் வழிநடையால்
நம்பிக்கையோடு களமாடு
நல்ல காலமும் நற்துணையாகும்

நல்வழிதானே உன் படை
நம்பி துணி கிடைக்கும் விடை
நற்தொழில் தேடு
நலம் பல தரும் நாடு

நம்பிக்கை கொண்டால்,
நாளும் நம் வசமே
நல்லன செய்தால்
நம் வாழ்வும் நல்வரமே

வெற்றி யாற்கும் பொதுவாகும்
வென்றவர் பின்தன் நிற்க்கும் உலகு
வென்றபின் நீ அகிலதின் பொது என பழகு
வென்றுபார் உள்ளங்களை எல்லாம் அழ
கு

Thursday, December 05, 2024

போகிற போக்கில்

 வழி

விரிந்த வெளி

திறந்த விழி
பிறந்த ஒளி

புரியும் வழி.


செயல்
செய்யும் வழி

செயல் அளி
செவ்ஒளி காட்டும் வழி
சேரிடம் தெளி.


இயற்கை
இயற்கை மொழி

இசையின் ஒலி
இன்பக் களி

இன்னலை அழி.


இல்லா நிலை
இல்லா நிலை தான்

எல்லா நிலையும்
என்னிலையும்

எண்ணிய நிலையாகுமா?


காண்
காண் காட்சிப் பிழையின்றி
காண் கருத்துப் பிழையின்றி
காண் ஆட்சிப் பிழையின்றி
காண்பன காண் அறிவுப்பிழையின்றி.


கவலை

கட கசப்பானவை
கட கடுமையானவை
கட கடப்பவையாவும்
கடகடவென கடக்கும் கவலைகள்யாவும்.


தகர்ப்பு
தகர் தடை யாவும்
தகர் தயக்கம் யாவும்
தகர் தவறுகள் யாவும்
தகர் தரணியில் தகர்பன யாவும்.


களம்
களம் காண துணி
களம் கற்றுத்தரும் கைகளே முதல்
களம் கைப்பற்று
களம் காப்பாற்றும்.


வாய்மை
வாய்ச் சொல்லூம்
வாய்புக்கான சொல்லூம்
வாய்மையல்ல - அறம்
வாய்க்க சொல்லுவதே வாய்மை.