Friday, October 24, 2014

மாசில்லா தீபாவளி

மாசில்லா தீபாவளி

இல்லங்கள் தோறும் விளக்கேற்றி
இதயங்கள் தோறும் அன்பூட்டி
இல்லாமை, கல்லாமை இவையிரண்டும்
இல்லாமல் போக இறைவனை வேண்டி
எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கும் படி
எல்லோரும் கொண்டாடுவோம் இனிய தீபாவளி


புத்தம் புது ஆடை அணிந்து
புன்னகையை பொன்னகையாய் இதழ்களில் புனைந்து
தித்திக்கும் இனிப்புகளை திகட்டாமல் சுவைத்து
தீதில்லா நட்புக்கும் உறவுக்கும் கொடுத்து மகிழ்ந்து
எத்திக்கும் இன்பமுற தீமைகளை அழித்து
தீபத்தின் திருநாளை கொண்டாடுவோம்

மத்தாப்பு பூக்கள் பூக்கும் போது
மாசாகும் மலர்கள் பூக்கும் காற்றின் வெளி
பட்டாசு வெடிக்கும் பொது
தூசாகும் வான் பார்க்கும் மண்ணின் விழி
காசுகளை கரியாக்கி மாசுகளால் நிறைக்கும் போது
மனசுகள் எப்படி நிறையும் சிந்திப்பீர்

ஓசையிடும் பட்டாசு வெடிகளை  இன்
ஓரங்கட்டி வைத்திடுவோம்
ஓட்டையான ஓசோன் படலத்தை கொஞ்சம்
ஒட்ட்டையடித்து ஒட்டவைக்க முயற்சிப்போம்
வெடிகள் வெடித்துத்தான் விடியல் காண வேண்டுமா என்ன ?
விளக்கின் ஒளியில் கூட விடியல் காணலாம் விபத்தில்லாமல்

காலம் காலமாய் நாம் மாசுபடுத்திய இயறக்கைக்கு
கைமாறாய் ஆளுக்கு ஒரு மரம் அவரவர் இருப்பிடத்தில்
ஆசையோடு நட்டு வளர்ப்போம்
ஓசையின்றி அவை தரும் பலன்கள் பல்லாயிரம் வரும் -இந்த
மாற்றம் ஒன்றை மட்டும் செய்து மங்களமான நாளை
மாசில்லா நாளாக்கி மகிழ்வோடு கொண்டாடுவோம் இனி
யாழ். பாஸ்கரன்

18/10/2014

No comments: