Wednesday, February 21, 2007

தண்ணீர் வேண்டி கண்ணீர் விடும் தமிழ் தேசமே

நதிகளை இழந்து தண்ணீர் பிரச்சனைகளில் பக்கத்து மாநிலங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் நாம் இனியாவது நம் மாநிலத்தில் உள்ள நீர் நிலைகளை கவணிப்போமா ?

கரையிலந்த கண்மாய்கள் இங்கு கணக்கிலாடங்கா
தரையாய் போன ஏரி குளங்கள் எல்லாம் ஏராளம்
நாரைக் கூட்டங்கள் கூடிய ஓடை ஓரங்கள் எல்லாம்
கூரை, ஓடு வீடுகளாச்சு

ஆறுகளில் எல்லாம் ஆலை கழிவும்
திருப்பூரு சாயகழிவும் பொங்கிப்போகுது
ஊற்று நீர் கிணறுகளின் உயிரினையும்
உருஞ்சிவிட்ட்து ஆழ் துளை கிணறுகள்

மழை தரும் மரங்களை எல்லாம்
முறையின்றி வெட்டிப் போட்டோம்
மாதம் மும்மாரி பொழிந்த்து போய்
மாமாங்கத்துக்கு ஒரு மழை வருவதே அரிதானது

காவிரிக்கு கரை கட்டிய கரிகாலனின்
குல வழியாகிய நாம் இன்று
தரை தட்ட மணலை வெட்டிக்
கொள்ளையடிக்கிறோம்

தண்ணீர் வேண்டி கண்ணீர் விடும்
தமிழ் தேசமே இனியாவது விழிப்பாயா?
உன்னிடம் உள்ள நீர் வளங்களை
உடனே கவணிப்பாயா?


சு.பாஸ்கரன்

3 comments:

ADHI VENKAT said...

அன்புடையீர்,

உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

தண்ணீர் சிக்கனம் [http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_8.html]

தங்கள் தகவலுக்காக!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்

Anonymous said...

வணக்கம்

இன்று தங்களின் தளம் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_8.html?showComment=1389145330759#c954743202069820496
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Kasthuri Rengan said...

வலி மிகுந்த வரிகள்
விழிப்போம்