Friday, October 24, 2014

கணித வாரம்

கணித வாரம் ( 13 /10/2014 to 18/10/2014)
கல்வி கலைக் கோவில் காக்கும்
கனிவுடை முதல்வர் அவர்களுக்கும்
கரை(ற)யிலா கல்வியுடை சான்றோர்களுக்கும்
குறைவின்றி கற்பிக்கும் ஆசிரிய பெருந்தகைகளுக்கும்


வான்மழை பருகும் பயிர்கள் போல
அறிவு அமுதம் அள்ளிப் பருகவந்திருக்கும்
இருபால் மாணவ மழலை மலர்களுக்கும்
இருகரம் கூப்பி உளமார எனது பணிவான காலை வணக்கம்

கணித வாரம்

வார வாரம் ஆரவாரமாய்
வந்து அறிவூட்டி அகம் தெளிவாக்கும்
வாரத்தின் வரிசையில் இந்தவாரம்
வந்த வாரம் கணிதவாரம்

கண்நோக்கு என்ற பதமே
கணக்கென மருவி இருக்க வேண்டும்- இது என் நோக்கு
முன் நோக்கினால் முதல் மனிதன் எண் அறிவு பெற்ற பின்தான்
முழு மனிதனாகி இருக்க வேண்டும்

ஒன்று பத்து நூறு என்று  ஒதி உணர்ந்து அறந்து கொள்ள
ஒப்பில்லா எண்கள் பல கோடி உண்டு அதை
ஒரு தப்பில்லாமல் கற்றுணர்ந்தால் தான் நல்ல படி
ஒடும் நம் வாழ்கை வண்டி

காலை மாலை எல்லாமே ஒரு
கணக்கில் தானே இயற்கை நடத்துது
கடிகார முட்கள் கூட
கணக்குப் போட்டுத்தானே காலம் காட்டுது

சுழியம் ஒன்று என்ற இரண்டு
எண்கள்  கொண்டுதானே கணிணி இயங்குது
சுழலும் கோள்களின் சூட்சுமம் யாவும்
கணக்கில் தானே பிணைந்து கிடக்குது

கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என
கணக்கு விதிகள் பல உண்டு அதை
கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து
கற்றுக் கொண்டு நம் வாழ்வின் விதியை மாற்றுவோம்

கணக்கியல் நுட்பங்களை கண்டு சொல்லிய
கணித மேதை இராமனுசம் போல
கருத்த்தூன்றி கற்றிடுவோம் கணக்கியலை

கணக்கின்றி பெற்றிடுவோம் வெற்றிகளை                   யாழ். பாஸ்கரன் (17/10/14)

No comments: