Thursday, February 22, 2007

மண்ணுக்கும் மழைக்கும் மணமுறிவு








மண்ணுக்கும் மழைக்கும் மணமுறிவு- நெல்
மணிகள் விளைந்த வயல்களில் பேரழிவு
கண்ணீர் துளிகள் காய்ந்து போனது
தண்ணீர் துளிகளை தேடியிங்கே

இறவை ஏற்றங்கள் இயங்கவில்லை
ஈர நிலங்கள் ஏதுமில்லை
இறந்து வறண்ட நிலங்களில்
ஏர் முனை கூர் கொழு இறங்கவில்லை

கால் பிரித்து விதையிட்டு – உழக்
கோல் எடுத்து ஏர் பிடித்து விளைவித்த நாம்
கால் வயித்து கஞ்சிக்கு வழிதேடி
கால் வலிக்க அழைகின்றோம்


சடைசடையா விளைஞ்ச கதிர் அறுத்து
சாரங்கட்டி போரடிச்சு மலமலையா குவிச்சு வச்ச
சீரக சம்பா போல நாமும் சிரிச்சுக் கிடந்தோமே
கல்லியஞ்சம்பா போல தானே களிச்சுக் கிடந்தோமே

புதுமை என்றும், புரட்ச்சி என்றும்
புதுசு புதுசா விதைகளையும்
பூச்சிக் கொள்ளிகளையும் கொண்டு வந்து
புகுத்தினாங்க ஐயா புகுத்தினாங்க

ஆறு மாச விளைச்சளை
மூனு மாசமா மாத்தினாங்க
இயற்கை உரம் வேண்டாம் என்று
செயற்கை உரத்தை போட்டானுக

விளைஞ்ச மண்ணு வெசமாச்சு
உழுத நிலம் ஊனமாப் போச்சு
உயர்ந்த மரங்களை வெட்டிப் போட்டு
ஊத்து மழையை சுட்டுக் கொன்றோம்

மாரி மரித்து ஏரி வறண்டு
நீர்நிலைகளின் வேரிறந்து போனது
ஊரழித்து நகராக்கி
உணவிழந்து வாடுகிறோம்






சு.பாஸ்கரன்

No comments: