Friday, December 01, 2006

மலருமா மனிதம் ?

நா நயமில்லாத பேச்சு
நாணயமற்ற மனிதர்கள்
நன்றி மறந்த உள்ளாங்கள்
நடிப்பு நுழைந்த இல்லங்கள்

நாடக மேடைதனில்
நாளும் பூசிய அரிதார
நகசுப் பூச்சுகளுடனே எல்லோரும்
நல்லவர்களாகவே நடிக்கிறோம்

காலத்தின் கட்டாயமாக்கப் பட்டு விட்டது
களவும் பொய்யும்
காகிதப் பணமும் காசும்
கசக்கி எறியும் குப்பையாய் மனம்

பண்ட மாற்றுக் காலங்களில்
பரமரிக்கப்பட்டு வந்த பண்பாட்டுப் படிமங்கள்
பகட்டுத்தனங்களுக்குள் சிக்கி சிதைந்து
பிடிமண்ணாய் உதிர்ந்து போனது

விற்பனைப் பொருளல்ல அன்பும் பாசமும்
கற்பனைக்கும் எட்டாத வகையில்
விலை கூவி விற்கப்படுகிறது
விகாரமான மனங்களால் மனிதநேயம்

சாலை விபத்தில் சிக்கியவன் மீது
சாவு கூட சற்று கருணை காட்டுகிறது னால்
சக மனிதன் சாபம் கொடுத்துப் போகிறான்
சாவு கிராக்கி என்று

இல்லங்கள் குடிசைகளாய் இருந்தபோது
உள்ளங்கள் கோபுரமாய் உயர்ந்திருந்தது
செல்வங்கள் சேர்ந்த பின் மனம்
பள்ளாங்களின் படுகுழிக்குள் விழுந்துவிட்டது

நினைவுச் சுவடியின் பக்கங்களில்
நாபகச் சுவடுகளை பத்திரமாய் பதிவு செய்வோம்
கனவுக் கால போதை கரைந்தபின்
கடந்த காலப் பாதையில் திரும்ப வேண்டிவரும்

கோபுர குயில்களுக்கு மட்டும்
பாட்டுச் சொந்தமல்ல
குப்பை மேட்டுக் காகங்களுக்கும் கூட
குரல் வளத்தோடு பாடவரும்

பளிங்கு மாளிகைப்
பஞ்சலோகச் சிலைகள் மட்டும் தான்
பக்திக்குறியனவா என்ன ? மந்தை வெளி
கூளங் கற்களும் கும்பிடத் தகுந்தவையே

ஏழையின் சிரிப்பில் இறைவனை
என்றும் காணச் சொன்னார் அண்ணா
சிரிப்பு ஏழைகள் இவர்கள் எங்கே
சீர்திருத்த சாலை அமைக்கப் போகிறார்கள்

மேட்டுக்குடி வாழ்கை முறையில்
கூட்டிக் கொடுக்கும் கலாச்சாரம் தான்
கொடிகட்டிப் பறக்கிறது இங்கு எங்கு
விடியலின் ஒளிக்கதிர் உதயமாகும்

ஆலயமணிகள் எல்லாம் அந்தியிலேயே
அடங்கிப் போய்விட்ன னாலும்
அரசு மதுக் கடைகள் ஆரவாரத்தோடு
அர்த்த சாமத்திலும் திறந்தே கிடக்கின்றன

உழைத்துப் பிழைப்பதை விட
ஊரை ஏய்த்துப் பிழைபது
எளிதாய் இருக்கையில்
எவருக்குப் பிடிக்கும் உழைப்பு

பெற்ற தாயையே
விற்க்க துணிகையில்
மாற்றாந் தாய்கள்
மரியாதையை எதிர்பார்க்களாமா?

சுற்றமும் நட்ப்பும்
சுமைதாங்கிகளாக இருந்தது போய்
சுமைகளாக கிவிட்ட பின்
சுகமானதாகுமா உறவுகள்

ஓட்டைப் படகில்
ஓடையைக் கடக்க முயற்சிப்பதில் தவறில்லை
கடலினைக் கைப்பற்ற நினைப்பது
கடவுளானலும் கவலைக் குறியதே

காட்டு யானையின்
கால்களுக்கிடையில் சிக்கிய போது தான்
கரும்புத் தோட்டங்களுக்கு
எறுப்புக் கூட்டங்கள் எவ்வளவோ மேல் என தெரியும்

இபொழுதெல்லாம் போட்டு வாங்குவதில்
எல்லோரும் புலிகளாகிவிட்டனர்
கணக்குப் போட்டு வாங்குவதில் அல்ல
கத்தியை கழுத்தில் போட்டு வாங்குவதில்

மா நகரங்கள் இன்று
மா நரகங்களாகிவிட்டது -மாலை
மங்கிய ஒளியில் - மதி
மயங்கிய நிலையில் மனிதவிலங்குகள்

பண்பாட்டு ஆடைகள்
பண்னாட்டு நாகரிகப் பற்களில் சிக்கி
பால்பட்டுப் பின் கண்காட்சிப் பொருளாய்
அயல்நாட்டு அருங்காசட்சியகங்களில்

அரை நூற்றாண்டு கழித்து
அரை நிர்வாணமாய்
அன்னாந்து பார்க்கிறோம்
அது நமக்கு உரியதா என

கருப்பு பணச் சீட்டுகளால் - கல்லாத பாமரனின்
ஓட்டு வங்கிகளை கொள்ளையடிக்கும்
திருட்டு அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்துமே
நாட்டு வங்கிகளை கொள்ளையடிக்கிறார்

சகதிச் சேற்றுக் குட்டைகள்
சாக்கடை ற்று மடைகள்
சடுகுடு டுகிறான் சாமான்யன்
சாலையை கடப்பதற்குக் கூட

சுரங்க சாக்கடை பள்ளங்கள்
திறந்தவெளி சவக்குழிகளாய்
பறக்கும் பேருந்துகள் மரண
பரிசு தரும் மயான தூதர்களாய்

எல்லோர்க்கும் சாவு வருவதுண்டு - ஆனால்
எல்லோரும் சாவதில்லை
கவுரவ சாவுகளாகவும்
கழிவிரக்கச் சாவுகளாகவும் கதை முடிகிறது.

நீதிப்படி இறப்பு எல்லோர்கும் சம்மாயினும்
நிதி இல்லாதவன் குப்பையில் எரியப்படுகிறான்
நிதி இருப்பவன் கல்லறைத் தோட்டத்தில்
நிம்மதியாய் இருக்க காணிநிலம் கேட்க்கிறான்

கேப்பை களி உண்டவனுக்கெல்லாம்
கோப்பை மதுவையும்-பஞ்சணையில்
கொஞ்ச கொங்கை மங்கையையும்
கொடையளித்தால் கோட்ப்பாடுகள் என்ன செய்யும்

பட்டுக்கு ஆசைப்பட்டு
பழைய கந்தையை விட்டெறிந்தவன்
பட்டும் பறிபோய் பழையதும் இழந்து
பரதேசிகளாய் நிற்க்கிறோம் பாரதத்தில்

No comments: