Thursday, September 25, 2014

தாய் நிலை

சுடர்மிகு விழியால் என்னை
என் பாதைக்கு ஒளியூட்டி சென்றாள்
பேரிடராய் வந்தென்னை தாக்கி
இன்னல் பட வைத்தாள்.


கடலலையாய் அவள் நினைவுகள்
கட்டு மரமாய் என் உணர்வுகள்
விட்டு விலகி போனாலும் ஏனோ
தொட்டு இழுக்கிறது அவள் நினைவு.

கூட்டுப்புழுவின் பறக்கும் பருவம்
பட்டு வலைகள் வெட்டுபடத்தான் செய்யும்
காட்டுக் குயிலின் கடைசிப்பாடல்
கேட்டு சுவைக்க செவிகள் இனிக்கும்.

அடிக்கடி எல்லை தாண்டியதாய்
அடி வாங்கி சிறை செல்லும் தமிழக மீனவனாய் நான்
எல்லை தாண்டியதாய் ஏமாற்றி எனை
சிறை பிடிக்கும் சிங்கள கடற்படையாய் அவள்

முகட்டு வளையில் விளையாடும் எலியை
பார்த்து பொழுது கடத்தும் மாணவனாய் நான்
முந்தா நாள் பாடத்தின் விடுபட்ட
வினாக்களை வினவும் ஆசிரியையாய் அவள்
முகம் தொங்கவிட்டே பதில் கூற இயலாத தருணங்களில்
ஆணையிட்டாள் அவள் தோப்புக்கரணம் போடும்படி

முட்டை மதிப்பெண் பெற்றே
பழக்கமாகிவிட்டது எனக்கு அவளிடம்
முழு மதிப்பெண் பெற முயற்சித்தன
முயற்சிகள் எல்லாம் தோல்விகளே.
வெற்று வாங்குவதும் வெற்றிதான்
என்னைப் பொருத்தவரை எல்லாம் அதற்குள்ளேயே

இல்லாதவனவற்றைத்தான் இன்று வரை
இருப்பதாய் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
எல்லாம் ஒன்றுதான் இருப்பதும் இல்லாததும்
இயற்கையின் ஈர்ப்பு சக்தியாய் பரிபாலனம் செய்யப்படுகிறது.

பார்வைகள் தெளிவானால் பார்ப்பது தவறாகாது
பாதைகள் வளைவானாலும் பயணம் நேராகவே தொடரும்
கவிதை வரிகளுக்கு வேண்டுமாயின் கச்சிதமாகலாம்
நடைமுறை சாத்தியக் கூறுகளில்
காட்சிப் பிழைகளாகி கானல்வரி பாடும்

சிறாற் இட்ட வெள்ளாமை
வீடுவந்து சேர்வதில்லையாமே
சிறுதிருத்தம் பெரியவர்கள்
சில காலம் விதைப்பது கூட இல்லை
நாற்று நடும் பொழுதே விளைச்சல்
விதைக்கப்படுகிறது விளைவிப்பது யார் என்ற கேள்வியில்லை.

காற்று கூட சில சமயம்
கலங்கப் படுத்தப்படலாம்
நெருப்பு கூட பல நேரங்களில்
ஊரை சுட்டுவிடலாம் ஆனால்
இரண்டும் உயிர் இயக்கத்தின்
உய்வுப் பொருள் நுகராமல் இருக்கமுடியாது.

தாய்மையை தருவது தாய் மட்டுமில்லை
தாய்நிலையில் தருவது யாராயினும் தாயே.
அன்பெனும் அமுதத்தை அடைகாக்கும் கோழிகள்
நட்பென்றும், காதலென்றும் இன்ன பிறவாகவும்
குஞ்சு பறிக்கலாம் ஆனாலும்
அவையாவும் தாய்மை எனும் துய்மைக்குள் அடக்கப்படும்.

No comments: