தூத்துக்குடி பொன் முத்தே
தூய தமிழ் நல் வித்தே
துடிதுடித்து நீ செத்து மடிந்தே
தூண்டிவிட்டாய்யடா
தூங்கிய எம் தமிழ் உணர்வை
மாண்டவன் நீயாகி
மாநிலத்தார் மனங்களில் எல்லாம்
மறையாத கதிரவனாய்
மறதமிழ் வீரனாய் மீண்டும் நீ
மறு பிறப்பெடுத்துவிட்டாய்
ஆண்டவனையும், ஆள்பவனையும்
ஆளுக்கு ஆள் வேண்டி நின்றோம்
ஆங்கே கொத்துக் கொத்தாய் சாவும்
ஆதி தமிழனைக் காப்பாற்ற
ஆருமில்லை என்று நீ ஆதங்கம் கொண்டாயோ
நீ பற்றவைத்த தீ
பற்றி பரவிடட்டும்
அறப்போராய்
அன்னை தமிகமெங்கும்
அதுவே உமக்கான எமது அஞ்சலி
ovoru tamilanukum indha unavu undu....
ReplyDeleteinnum yedhakaga kathirukirom...ithanai nadhadhum thudakadha irunkumalaavarkalin pirapil avarkall iiyam kolla vendum.
nandraa unarthi irukirir nanbha- raji