Pages

Friday, October 19, 2007

தொட்டில் குழந்தைகள்

ஐயிரண்டு மாதங்கள்
மெய் வருத்தி சுமந்து நீங்கள்
பெற்ற பிள்ளை நாங்கள்
பெண்ணாய் போனதாலே

அரசு தொட்டில் தேடிச் சென்று
அனாதையாய் எறிந்து வரும்
அவலம் இங்கு அச்சமின்றி
அனுதினமும் நடக்குதம்மா!
தாய் வெறுத்த பிள்ளைகளாம் எங்களை
தமிழரசு ஏற்றாலும்
தவறரியா சேயகள் நாங்கள்
தான் செய்த குற்றமென்ன?

நல்ல வேளை கள்ளிப் பாலூற்றி
எங்களை கொல்லாமல்
தொட்டில் குழந்தையாய்
விட்டுப் போனதற்கு கோடி நன்றி

பெற்ற குழந்தையையே
பெயரிலியாய் விட்டெறிந்த எம்
பெற்றோரே உற்ற
உறவுகளை எங்கணம் தான் காப்பீரோ?

முன்னுரையில்லாத கட்டுரையாய்
முகவரியிழந்த முகங்களுடன்
நாளைய உலகில் நாங்கள்
என் செய்வோம் சிந்தித்தீரா?

No comments:

Post a Comment