Monday, December 04, 2006

தமிழா தமிழா? ஆங்கிலமா?


பட்டி மன்ற தலைப்பாகிவிட்டது
படித்திட தேவை தமிழா? ஆங்கிலமா?
தமிழன் வாழும் மண்ணில்
தமிழ் மட்டும் அகதியாய்

தனக்கோரிடம் கேட்கிறாள்
தமிழ் தாய் தங்கிப் படிக்க
தொடக்கப் பள்ளி முதல்
தொலைதூரக் கல்வி வரை

தன் பிள்ளைகள் எதிர் காலம்
தொல்லையாய் போகும்
தாய் மொழி கல்வியால் என - அவள்
ஊட்டி வளர்த்த குழந்தைகள்
ஊளையிடுகின்றன

ஆங்கில மோகம் ஆமோகமாய்
ஆனதால் கப்பம் கட்டச் சொல்கிறது
அதனை கற்பதற்கு
அன்னைத் தமிழோ அனாதையாய்
பிச்சை கோட்கிறது

குளிர் தமிழ் சொல்லருவி தனில்
குளிக்கின்ற குழவிக்கு
குறைவில்லா ஞானமுண்டு
நிறைவான எதிர் காலமுண்டு

மண் தவழும் மழலை
மங்காத தமிழ்தனிலே
அம்மா என்றழைக்கும்
அமுத மொழி கேட்க யிரம் செவி வேண்டும்

பண்ணிசைக்கும்
யாழ் போலே
பார்தனில் மொழியிசையால்
மோகமூட்டுவது பைந்தமிழ் தானே

என்ன வளம் இல்லை
என் தமிழில் -பின்
ஏன் மாற்றமில்லை
நம் தாய் மொழியில்

நுணி நாக்கில் -நீ
நுகர்ந்துவிட்ட
ஆங்கிலத்தால்
அன்னை தமிழுக்கு ஆபத்து

ஆங்கிலமும் அறியாமல்
தமிழும் தெரியாமல்
தடுமாறுவது
தமிழர் நலனுக்கு ஆபத்து

மொழி பல கல்
எம்மொழி கற்றாலும்
எண்ணங்களில் - உன்
தாய் மொழி வழி நில்

சுபா

No comments: