Pages

Thursday, May 08, 2008

விடுமுறை

பள்ளிக்கூட விடுமுறையில்
பழைய கஞ்சி ஊத்திக்கிட்டு
பட்டி ஆட்ட ஓட்டிக்கிட்டு
பாட்டங்காடு தேடிப் போவோம்
பச்ச புல்லு மேய்சலுக்கு


ஆத்தா அப்பனுக்கு தெரியாம
ஆளுக்கு ஓரு ஆலாக்கு
அரிசி பருப்பு கொண்டு போயி
அடுப்பு மூட்டி ஆக்கித் திம்போம்
ஆவி பறக்க கூட்டாஞ்சோறு.

வாய்க்கா மேட்டு ஏரியில
வவறங் காட்டு ஓரத்துல
வளஞ்சிருக்கும் கோணபனையேறி
வெளஞ்ச கொல நுங்கு வெட்டி
வயிறுமுட்ட திண்ணிடுவோம்

பச்சகொட்டகுச்சிதண்டு
பக்குவமா வெட்டியாந்து
பனங்குடுக்கா வண்டி சேத்தி
பாரமெல்லாம் நிறைய ஏத்தி
பட்டணந்தான் போய்வருவோம்

மலவேம்பு உச்சியில் ஏறி நின்னுக்கிட்டு
மண்ண அள்ளிப் பூசிக்கிட்டு
மலையள கருப்பு நான்டா
மலையேற வந்திருக் கேன்டான்னு
மருளு வந்து ஆடிடுவோம்

------ தொடரும்

3 comments:

  1. நன்றாக வந்திருக்கிறது, நண்பா
    ஓலப்பாளையம், பாக்கியராஜின்
    முந்தானை முடிச்சில் வந்த இடமா..?


    சிவபார்க்கவி
    திருச்சி

    ReplyDelete
  2. நன்றி சிவபார்க்கவி .
    ஓலப்பாளையம் - காகித ஆலை TNPL அருகில் உள்ளது

    ReplyDelete